ஊரடங்கு எதிரொலி: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரம் மாற்றம்
By DIN | Published On : 05th January 2022 09:38 PM | Last Updated : 06th January 2022 12:42 PM | அ+அ அ- |

aசென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரம் மாற்றம்
கரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக நாளைமுதல் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதித்து பொதுப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்தில் புதிதாக 4,862 பேருக்கு கரோனா: சென்னையில் 2 ஆயிரத்தைத் தாண்டியது
இந்நிலையில் சென்னையில் நாளை (ஜனவரி 6) காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.