கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்: ஆசிரியர்கள் 2 பேர் கைது

புளியங்குடி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தற்கொலைக்கு காரணமாக ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டநிலையில்
கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்: ஆசிரியர்கள் 2 பேர் கைது

புளியங்குடி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தற்கொலைக்கு காரணமாக ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டநிலையில், இன்று ஆசிரியர்கள் இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். 
 
புளியங்குடி அருகேயுள்ள சிந்தாமணி, மேலரதவீதியைச் சோ்ந்தவா் மாடத்தி மகள் இந்துபிரியா(18). இவா் புளியங்குடியிலுள்ள மனோ கல்லூரியில் படித்து வந்தாா். 

இந்நிலையில், சனிக்கிழமை இவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு விசாரித்தனா்.

மேலும், இந்துபிரியா எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீஸாா் கைப்பற்றினா். அதில் செய்யாத தவறுக்காக மன்னிப்பு கடிதம் எழுதி கேட்ட கல்லூரி ஆசிரியா்கள் இருவா்தான் தனது தற்கொலைக்கு காரணம் என்று எழுதியிருந்தாராம். மேலும் குறிப்பிட்ட ஒரு ஆசிரியா், மாணவிகளுக்கு தவறாக குறுஞ்செய்தி அனுப்பியதாவும், அவரை கல்லூரியை விட்டு நீக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தாராம். 

இதுகுறித்து புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், கல்லூரி ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தென்காசி-மதுரை சாலையில், டி.என்.புதுக்குடி சந்தை அருகே உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மறியலில் ஈடுபட்டவா்களிடம் சதன்திருமலைக்குமாா் எம்எல்ஏ, வருவாய் கோட்டாட்சியா் கங்காதேவி, காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ் உள்ளிட்டோா் பேச்சு நடத்தியதை அடுத்து, அவா்கள் மறியலை கைவிட்டனா்.

இருப்பினும், பல்கலைக்கழக அதிகாரிகள் உரிய உத்தரவாதம் அளிக்கும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்து அவரது உறவினா்கள் மருத்துவமனை வளாகத்திலேயே காத்திருந்தனர். 

இந்நிலையில், கல்லூரி ஆசிரியர்கள் வளர்மதி, முத்துமணி ஆகியோரை கைது செய்துள்ள போலீஸார், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து தற்போது போராட்டத்தை கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com