சாய் பல்லவியின் பிறந்த நாள் பரிசு: கார்கி பட போஸ்டர்

மும்பை: சாய் பல்லவியின் பிறந்த நாளை முன்னிட்டு கார்கி பட போஸ்டர் வெளியாகியுள்ளது.
gargi poster
gargi poster

மும்பை: சாய் பல்லவியின் பிறந்த நாளை முன்னிட்டு கார்கி பட போஸ்டர் வெளியாகியுள்ளது. 

இந்த படத்தை பற்றி பேச நிறைய மாதங்களாக காத்திருந்தேன். என்னுடைய பிறந்தநாள் அன்று இந்த போஸ்டரை வெளியிட வேண்டுமென எங்களுது படக்குழு வீம்பாக இருந்தது. கௌதமின் மூளையில் இருந்து பிறந்த குழந்தை இதோ உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன், கார்கி" என்று ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 

கார்கி படம் அநீதிக்கு எதிரான ஒரு பெண்ணின் போராட்டத்தை பற்றின படம். இப்படத்திற்கு கோவிந்த வசந்த் இசையமைத்து இருக்கிறார்.

தமிழ் தெலுகு கன்னட மொழிகளில் இந்த போஸ்டர் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சாய் பல்லவி அவர்களே அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் முன்னோட்ட விடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com