பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து எலான் மஸ்க் வெளியிட்ட பதிவு!

பிரதமர் மோடியுடன் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் சந்தித்துப் பேசவுள்ளார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பு  குறித்து எலான் மஸ்க் வெளியிட்ட பதிவு!

உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான ’டெஸ்லா’ நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனைமேற்கொள்ளவுள்ளார்.

இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை தொடங்கவிருக்கும் திட்டம் குறித்த அறிவிப்பு இந்த சந்திப்பின்போது வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் எலான் மஸ்க் தெரிவித்திருப்பதாவது, இந்தியாவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பை எதிர்நோக்கியுள்ளேன் எனப் பதிவிட்டுள்ளார்.

ஏப்ரல் கடைசி வாரம் பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவில் பிரதமர் மோடியை எலான் மஸ்க் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்தியாவில் 2 பில்லியன் டாலர் முதலீட்டில் அமையவுள்ள தொழிற்சாலைக்கான இடத்தைக் காண டெஸ்லாவின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு இந்த மாதம் வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com