வாணியம்பாடி: வாகனத் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது, 11 இருசக்கர வாகனங்கள் மீட்பு

வாணியம்பாடி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்,
வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேரை கைது போலீசார், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 11 இருச்சக்கர வாகனங்கள்.
வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேரை கைது போலீசார், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 11 இருச்சக்கர வாகனங்கள்.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர், அவர்களிடமிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 11 இருச்சக்கர வாகனங்களையும் மீட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக நகர காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் நகர போலீசார் வாணியம்பாடி - பெருமாள்பேட்டை ரயில்வே மேம்பாலம் அருகில் மற்றும் தாலுக்கா அலுவலகம் பின்புறம், முனீஸ்வரன் கோயில் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேரை கைது போலீசார், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 11 இருச்சக்கர வாகனங்கள்.
தங்கம் விலை மீண்டும் ரூ.54,000-ஐ தாண்டியது!

அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தும்பேரி பகுதியைச் சேர்ந்த அய்யப்பன்(28), சிக்னாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த அரவிந்த் (23) ஆகிய இரண்டு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது முன்னுக்கு பின் பதில் அளித்ததால் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதன் பேரில், பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான 11 இருசக்கர வாகனங்களை போலீசார் மீட்டனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com