முன்னாள் எம்எல்ஏ உறவினர் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை

அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு வீடுகள் மற்றும் உறவினர் வீடுகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் எம்எல்ஏ உறவினர் வீட்டில்  ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை

விழுப்புரம் : கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு வீடுகள் மற்றும் உறவினர் வீடுகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் எம்எல்ஏ பிரபுவின் தந்தை அய்யப்பா, 2006-2011 வரை ஒன்றியக் குழுத் தலைவராக இருந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளைக் குவித்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.

முன்னாள் எம்எல்ஏ உறவினர் வீட்டில்  ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை
போதைப்பொருள் தலைநகரமாக தமிழ்நாடு மாறியுள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு

இதைத் தொடர்ந்து. கள்ளக்குறிச்சியில் உள்ள முன்னாள் எம்எல்ஏ பிரபு, அவரது தந்தை அய்யப்பா வீடுகள், தொடர்புடைய வீடுகள், நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை காலை முதல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில் விழுப்புரம் மருத்துவமனை வீதியில் அமைந்துள்ள பிரபு மைத்துனர் வழக்குரைஞர் சுபாஷின் வீட்டில் 6 பேர் கொண்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com