திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாஜக இருக்கும்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேட்டி

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாஜக இருக்கும் .
சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

சென்னை: திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாஜக இருக்கும் எனவும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

சென்னை புரசைவாக்கம் பகுதியில் மத்திய சென்னை தொகுதிக்குள்பட்ட பகுதியில் பாஜக தேர்தல் அலுவலகத்தை சனிக்கிழமை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் திறந்து வைத்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர் .

சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
ராசிபுரம் அருகே ரூ.6.2 கோடி தங்க நகைகள் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், தமிழ்நாட்டில் இருந்து பாஜக சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த முறை இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பதாகவும், குறிப்பாக அண்ணாமலை, வினோஜ், எல்.முருகன் போன்றவர்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

மேலும் 10 ஆண்டு காலத்தில் நேர்மையான ஊழலற்ற வெளிப்படுத்தன்மையான ஆட்சியினை பாஜக அளித்து இருப்பதாக அவர் பெருமிதமாக தெரிவித்தவர், தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறுவோம். திமுக,அதிமுகவுக்கு மாற்றாக பாஜக இருக்கும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com