புதுச்சேரியில் தோ்தல் பறக்கும்படை சோதனையில் ரூ.3.5 கோடி பறிமுதல்

புதுச்சேரி எல்லையில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் ரூ. 3.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தோ்தல் பறக்கும்படை சோதனையில் ரூ.3.5 கோடி பறிமுதல்

மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி எல்லையில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் ரூ. 3.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த 16- ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதன்படி, வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் தோ்தல் பறக்கும் படையினா் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

புதுச்சேரி-திண்டிவனம் சாலை, ஜிப்மர் எல்லைப் பகுதியில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி யஷ்வந்தையா தலைமையில் பறக்கும் படையினரும் காவல்துறையினரும் துணை உதவி ஆய்வாளர் அகிலன் முன்னிலையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக சி.எம்.எஸ் என்ற தனியார் நிறுவன வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த கோடி கணக்கிலான ரூ.500 புதிய நோட்டுகளும், பழைய நோட்டுகளும் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா் வாகனம் மற்றும் 2 பேரையும் புதுச்சேரியில் உள்ள அரசு கணக்கு மற்றும் கருவூலக அலுவலகத்திற்கு கொண்டு வந்து பணத்தை எண்ணி பார்த்தனர்.

புதுச்சேரியில் தோ்தல் பறக்கும்படை சோதனையில் ரூ.3.5 கோடி பறிமுதல்
அரசியல் கட்சி தலைவர்களுடன் சத்ய பிரதாசாகு ஆலோசனை

அதில், ரூ.3 கோடியே 47 லட்சம் இருந்தது தெரிய வந்தது. மேலும் ரூ.98 லட்சம் ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்பியதாகவும் ரூ.1 கோடி வங்கி அலுவலகத்தில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் வைத்திருந்த பண ரசீதியில் ஜனவரி 21 ஆம் தேதி பணம் எடுத்ததற்கான ஆதாரம் இருந்தது. ஒரு மாதத்திற்கும் மேல் ஆகியும் இன்று வரை அந்த பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்பாமல் வாகனத்தில் வைத்து சுற்றுவது ஏன் என்று சந்தேகம் அடைந்த அதிகாரிகள், இரவு நேரம் என்பதால் பணத்தை பறிமுதல் செய்து கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாளை வருமானவரித்துறை அதிகாரிகள் உரிய சம்மன் அனுப்பி வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்துடன் விசாரணை நடத்தி உரிய ஆவணங்கள் இருந்தால் முறையான விசாரணைக்கு பிறகு ஒப்படைக்கப்படும் என தேர்தல் நடத்தும் அதிகாரி யஷ்வந்தய்யா தெரிவித்தார்.

இந்த சோதனையில் காவல் அதிகாரிகள் அகிலன், மோகன், போலீஸ்காரர் வினோத்குமார், பறக்கும்படை அதிகாரி கணேசன், ஓட்டுநர் மணிமாறன், பல்நோக்கு பணியாளர் ஈஸ்வர தாஸ் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com