அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யத் தேவையில்லை: நமச்சிவாயம் பேட்டி

மக்களவைத் தோ்தலில் புதுச்சேரியில் போட்டியிடுவதற்காக மாநில அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய அவசியமில்லை.
அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யத் தேவையில்லை: நமச்சிவாயம் பேட்டி

புதுச்சேரி: மக்களவைத் தோ்தலில் புதுச்சேரியில் போட்டியிடுவதற்காக மாநில அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய அவசியமில்லை, அப்படி செய்ய வேண்டும் என சட்டமும் சொல்லவில்லை என்று பாஜக வேட்பாளரும், உள்துறை அமைச்சருமான ஆ.நமச்சிவாயம் தெரிவித்தார்.

மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. புதுச்சேரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக அக்கட்சியின் தேசியச் செயற்குழு உறுப்பினரும், மாநில உள்துறை அமைச்சருமான ஆ.நமச்சிவாயம் அறிவிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு என்.ஆா்.காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான என்.ரங்கசாமி ஆதரவளித்துள்ளாா்.

அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யத் தேவையில்லை: நமச்சிவாயம் பேட்டி
மோடி ஜெயிக்கக்கூடாது; அவரை தோற்கடிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி பேட்டி

பாஜக வேட்பாளராக ஆ.நமச்சிவாயம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவா் திங்கள்கிழமை புதுச்சேரி வழுதூா் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரும்,தோ்தல் அலுவலருமான அ.குலோத்துங்கனிடம் மனுத்தாக்கல் செய்யவுள்ளாா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, அமைச்சர் பதவியில் இருந்துகொண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆ.நமச்சிவாயம், மக்களவைத் தோ்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடுவதற்காக மாநில அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி செய்ய வேண்டும் என சட்டமும் சொல்லவில்லை. அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு தான் தேர்தலை சந்திக்கிறேன். தேர்தல் தோல்வி பயத்தில் எதிர்க்கட்சியினர் என்னை பதவி விலக கூறுவதாக அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com