கம்போடியாவில் வேலை! ஏமாற்றப்பட்ட 250 இந்தியர்கள் மீட்பு

கம்போடியாவில் வேலை! ஏமாற்றப்பட்ட 250 இந்தியர்கள் மீட்பு

தென்கிழக்காசிய நாடான கம்போடியாவுக்கு வேலை தேடிச் சென்ற 250 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றும் போலி முகவர்கள் மூலம், கம்போடியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்கள், அங்கு சட்டவிரோத சைபர் குற்றச் செயல்களில் பணியமர்த்தப்பட்டார்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஊடகங்களில் இதுகுறித்த செய்தி வெளியான நிலையில், கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கும், அங்கு மட்டிக்கொண்ட இந்தியர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதையடுத்து, கம்போடியாவில் உள்ள இந்தியர்களுக்கு, மோசடி கும்பல் குறித்த தகவல் வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகம் மூலம் பலமுறை வழங்கப்பட்டு வந்துள்ளன.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களில் 75 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்போடிய அதிகாரிகளுடன் இணைந்து போலி முகவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com