ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

கொல்லம் விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலியான விவகாரத்தில் தெற்கு ரயில்வே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

கொல்லம் விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலியான விவகாரத்தில் தெற்கு ரயில்வே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட கொல்ல விரைவு ரயில், உளுந்தூர்பேட்டைக்கும் விருத்தாசலத்துக்கும் இடையே சென்றுகொண்டிருந்த போது ஏழு மாத கர்ப்பிணி பெண் தவறி விழுந்தார். இதனை பார்த்த அந்த பெண்ணின் உறவினர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தும் ரயிலை நிறுத்த முயற்சித்தபோது அபாய சங்கிலி வேலை செய்யாததால் பக்கத்து பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.

பின்னர் 8 கி.மீ தள்ளி நின்ற ரயிலில் இருந்து இறங்கிய உறவினர்கள், கர்ப்பிணி பெண் தவறி விழுந்த இடம் நோக்கி ஓடிச் சென்று பார்த்த போது அவர் கிடைக்கவில்லை.

இதையடுத்து அங்கிருந்து 20 நிமிடங்கள் தாமதமாக விருத்தாசலம் ரயில் நிலையம் வந்தது. ரயிலில் இருந்து கதறி அழுதுகொண்டே இறங்கிய கர்ப்பிணி பெண்ணின் உறவினர்களிடம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களிடம் கர்ப்பிணியை மீட்டு தருமாறு கதறி அழுதனர்.

இதையடுத்து ரயில்வே போலீசார் விரைந்து சென்று கர்ப்பிணியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இரண்டு மணி நேர தேடலுக்குப் பின் உளுந்துர்பேட்டையில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் இறந்து கிடந்த கர்ப்பிணியின் உடலை மீட்டனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு
தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

சென்னை பெரியார் நகர் திரிசூலத்தை சேர்ந்த பி.எஸ்சி செவிலியர் பட்டதாரியான கஸ்தூரிக்கும், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பட்டதாரியான தென்காசி மாவட்டம் மேலநீழிதநல்லூரைச் சேர்ந்த சுரோஷ்குமாருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. 7 மாத கர்ப்பிணியான கஸ்தூரிக்கு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை(மே 5) வளையகாப்பு நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

இதற்காக கொல்லம் விரைவு ரயிலில் முன்பதிவு செய்து தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் ரயில் சென்றுள்ளனர். அப்போது கஸ்தூரிக்கு வாந்தி வந்துள்ளது. உடனே அவர் உறவினர்கள் உதவியுடன் பயணம் செய்த பெட்டியில் இருந்த கை கழுவும் இடத்திற்கு வந்து வாந்தி எடுத்தப்படி நின்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ளார் என்பது ரயில்வே போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கர்ப்பிணி கஸ்தூரி ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த விவகாரம், ரயில் பெட்டியில் அபாய சங்கிலி செயல்படாத புகார் குறித்தும், பலியான பெண் ஏன் ரயில் பெட்டியின் கதவு அருகே சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தவும் தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கஸ்தூரிக்கு திருமணமாகி 9 மாதங்கேளே ஆனதால் விசாரணை நடத்த திருக்கோவிலூர் கோட்டாட்சியர் கண்ணனுக்கு ரயில்வே இருப்புப்பாதை போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com