சுடச்சுட

  
  indian-handloom-saree

  வள்ளுவர்கோட்டம்: ‘கைத்தறி கண்காட்சி’
  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்திய கைத்தறி  புடவைகளுக்கான கண்காட்சி மற்றும் விற்பனை மேளா நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதுமிருந்து குறிப்பாக வடகிழக்கு  மாநிலங்களில் இருந்து வந்திருக்கும் கிராமப்புற நெசவாளர்களின் தயாரிப்பில் உருவான புதுமையான கைத்தறி புடவைகள், பட்டுப் புடவைகள், கைத்தறி போர்வைகள், தலையணை உறைகள், ஜன்னல் திரைகள் மற்றும்  ஆண்களுக்கான வேஷ்டிகள், துண்டுகள் மேலும் பலவிதமான கைத்தறிப் பொருட்கள் இந்தக்  கண்காட்சியில்  கிடைக்கும். ஆகஸ்டு 21 வரை நடைபெறவிருக்கும் இந்தக் கண்காட்சி பற்றிய மேலதிக தகவலுக்கு  988446747 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

  கல்யாண் ஜுவல்லர்ஸ்: ’இலவச தங்க காசு’
  கல்யாண் ஜூவல்லர்ஸ் விழாக்கால சிறப்புப் பரிசாக ரூ.25000 க்கும் அதிகமான தொகையில் நகை வாங்குபவர்களுக்கு ஒரு தங்க நாணயம் இலவசம் என்று அறிவித்திருக்கிறது. கல்யாணின் அனைத்துக் கிளைகளிலும் இந்த சிறப்புப் பரிசு செல்லுபடியாகும். இந்தச் சலுகை செப்டம்பர் 30 வரை தொடரும் என்று அறிவித்திருக்கிறார்கள். தொடர்புக்கு - 24328633

  ரேமன்ஸ்: 'அழகாகத் தோன்றுங்கள்,அழகானவற்றைச் செய்யுங்கள்:
  ரேமன்ஸ் ஆடை நிறுவனத்தார் கூன்ஜ் நிறுவனத்துடன் இணைந்து ஆண்களுக்கான காற்சட்டைகளுக்கான எக்சேஞ்ச் மேளாவை அறிவித்துள்ளனர். அனைத்து ரேமன்ஸ் ஆடை நிலையங்களிலும் ஆண்கள் தங்களது பழைய ரேமன்ஸ் காற்சட்டைகளை   எக்சேஞ்ச் செய்து கொள்ளலாம், மேலும் முன்பே வாங்கப்பட்ட  ஆடைகளில்  திருத்தங்கள் இருப்பின் இலவசமாக தைத்துக் கொள்ளலாம். 'அழகாகத் தோன்றுங்கள்,அழகானவற்றைச் செய்யுங்கள்' எனும் அறிவிப்பின் கீழ் ரேமன்ஸ் இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறது. இந்த சிறப்பு வாய்ப்பு ஆகஸ்டு 28 வரை அனைத்து ரேமன்ஸ் விற்பனை மையங்களிலும் நீடிக்கும். தொடர்புக்கு - 288331677

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai