தினமணி.காமில் இனி வாரந்தோறும் வெள்ளி விட்டு வெள்ளி ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்...
By கார்த்திகா வாசுதேவன் | Published On : 22nd October 2018 11:35 AM | Last Updated : 22nd October 2018 04:07 PM | அ+அ அ- |

‘சுயமரியாதை மற்றும் சமூக அங்கீகாரத்தில் எங்கும் எப்போதும்'நோ காம்ப்ரமைஸ்'
நேர்காணல் - 1
விருந்தினர் - திருநங்கை ஜீவா சுப்ரமண்யம்
சந்திப்பு - கார்த்திகா வாசுதேவன்
முன்னெப்போதைக் காட்டிலும் நாம் இப்போது திருநங்கைகள் குறித்து அதிகம் பேசத்தொடங்கி இருக்கிறோம். அவர்களுக்கான சமூக அங்கீகாரமும், சுயமரியாதையும் எள்ளளவும் குறையக் கூடாது. அவர்கள் வேற்றுக் கிரகவாசிகள் அல்ல, நம்மைப்போன்ற சகமனிதர்களே எனும் சகிப்புத் தன்மையும், நியாய உணர்வும் கொண்டவர்களாக இளைய தலைமுறையினர் மாறி வருகின்றனர். இந்த உணர்வு இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த மனமாற்றம்! இதை அப்படியே அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கடத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
கடமைக்காக மட்டும் அல்ல, சக மனிதர்களுக்கு கிடைக்கக் கூடிய அத்தனை வாழ்வியல் வாய்ப்புகளும், வாழ்வாதார வாய்ப்புகளும் இனி திருநங்கைகளுக்கும் கிடைக்க வேண்டும் எனும் மன உறுதியுடன் நாம் சந்திக்கவிருப்பது திருநங்கை ஜீவா சுப்ரமண்யம் அவர்களை...
சந்திப்பிற்கான டீஸர் இதோ இப்போது உங்கள் முன்...
முழு நேர்காணலை வெள்ளியன்று தினமணி இணையதளத்தில் காணத்தவறாதீர்கள்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...