யாரெல்லாம் தைரியமான பெண்கள் தெரியுமா? ஹிலாரி கிளின்டனைக் கேளுங்கள்!

அம்மாக்கள் தங்கள் குட்டிப் பெண்களிடம் நிச்சயம் பகிர்ந்து கொள்ள வேண்டிய பேச்சு இது.புத்தகம் வெளிவரவிருப்பது அக்டோபர் 1, 2019. புத்தகத்தைப் படிக்க ஆர்வமிருப்பவர்கள் அதுவரை காத்திருங்கள்.
யாரெல்லாம் தைரியமான பெண்கள் தெரியுமா? ஹிலாரி கிளின்டனைக் கேளுங்கள்!

கட்ஸி வுமன் (GUTSY WOMEN) யாரெல்லாம் தெரியுமா? ஹிலாரி கிளின்டனைக் கேளுங்கள்!

முதல் முறையாக அம்மாவும் பெண்ணுமாகச் சேர்ந்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்கள். 

அம்மா ஹிலாரி கிளின்டன், பெண்... அவரது மகள் செல்ஸியா. 

புத்தகம் முழுக்கவும் பெண்களைப் பற்றித்தான் பேச்சு. ஆம், அம்மா ஹிலாரி கிளின்டன், மகள் செல்ஸியா கிளின்டனுடன் பகிர்ந்து கொண்ட தைரியமான பெண்களைப் பற்றிய தினசரிப் பேச்சைத்தான் இருவருமாகச் சேர்ந்து இப்போது கட்ஸி வுமன் என்ற பெயரில் புத்தகமாக்கியிருக்கிறார்கள். பேச்சு ரேடியம் கண்டுபிடித்த விஞ்ஞானி மேரி கியூரியில் இருந்து காலநிலை ஆர்வலர் (climate activist) கிரேட்டா தன்பெர்க் சவுதி களச் செயற்பாட்டாளரான மனால் அல் ஷெரிஃப் உட்பட கிட்டத்தட்ட 100 பிரபலமான பெண்களைப் பற்றி... அதாவது எதைப் பற்றியும் கவலைப்படாமல், எது குறித்தும் அஞ்சாமல் தாங்கள் மேற்கொண்ட பணியில் துணிச்சலுடன் இறங்கிச் செயல்பட்ட 100 பெண்களைப் பற்றியதாம். இது தொடங்கியது இன்று நேற்றல்ல. செல்ஸியா குழந்தையாயிருந்த போதே, ஹிலாரி அவரிடம் சொல்லத் தொடங்கிய, பகிரத் தொடங்கிய விஷயங்களின் தொகுப்பு தானாம் இது. 

அம்மாக்கள் தங்கள் குட்டிப் பெண்களிடம் நிச்சயம் பகிர்ந்து கொள்ள வேண்டிய பேச்சு இது.

புத்தகம் வெளிவரவிருப்பது அக்டோபர் 1, 2019. புத்தகத்தைப் படிக்க ஆர்வமிருப்பவர்கள் அதுவரை காத்திருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com