உங்கள் முகம் சர்வ அழகுடன் ஜொலி ஜொலிக்க வேண்டுமா? இதோ டிப்ஸ்

நமது சருமம் மற்றும் தோற்றத்தை அழகாக காட்டுவதில் நமது மேக்கப் தான் முக்கிய பங்கு வகிக்கிறது
உங்கள் முகம் சர்வ அழகுடன் ஜொலி ஜொலிக்க வேண்டுமா? இதோ டிப்ஸ்

நமது சருமம் மற்றும் தோற்றத்தை அழகாக காட்டுவதில் நமது மேக்கப் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் நாம் செய்யும் சில மேக்கப் தவறுகள் நமது இயற்கையான வயதை விட சில நேரங்களில் வயதானவர்களாகக் காட்டி விடும்.

எனவே மேக்கப்பில் சின்ன மாற்றங்கள் செய்தால் உங்கள் தோற்றத்தை இளமையாகவும், அழகாகவும் மாற்றிவிடும்.

மேக்கப் போடுவதற்கு முன் உங்கள் சருமத்தை தயார்படுத்திக் கொண்டால் உங்கள் மேக்கப் கச்சிதமாகவும், நீண்ட நேரம் கலையாமலும் இருக்கும். சருமத்தை தயார் செய்வது என்பது முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி போதுமான ஈரப்பதத்தைக் கொடுத்து புத்துணர்வாக்க வேண்டும்.

மாய்ஸ்சரைஸர் அப்ளை செய்யாவிட்டால் உங்கள் மேக்கப் திட்டு திட்டாக காணப்படும் வாய்ப்புள்ளது. மேக்கப் போடுவதற்கு முன் ப்ரைமர் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவை உங்கள் முகத்தில் உள்ள சருமத் துளைகளை மறைத்து ஒரு சமமான மேக்கப் அழகை கொடுக்கும்.

அடர்ந்த நிற லிப்ஸ்டிக் எல்லாரும் கண்டிப்பாக அடர்ந்த நிற லிப்ஸ்டிக்கை விரும்புவோம். அடர் சிகப்பு, அல்லது அடர்ந்த ஒயின் கலர், பெர்ரி நிறங்கள் அல்லது அடர்ந்த ஊதா நிறங்கள், அல்லது அடர்ந்த நீல நிறங்கள் போன்றவற்றை விரும்புவோம். ஆனால் சற்று வயதானவர்களுக்கு இந்த அடர்ந்த நிறங்கள் இன்னும் கொஞ்சம் வயதான தோற்றத்தைக் கொடுத்துவிடும். எனவே லேசான பிங்க் போன்ற நிறங்களை தேர்ந்தெடுங்கள். உங்களுக்கு கொஞ்சம் வயதாக ஆரம்பித்ததும் உங்கள் உதடு சருமம் கேலோஜெனை இழந்து மெல்லியதாக மாறிவிடும். எனவே நீங்கள் அடர்ந்த நிறங்களை பயன்படுத்தும்போது உங்கள் உதடுகளை அவை மேலும் மெல்லியதாக காட்டும். இதுவே லேசான நிறங்கள் என்றால் உங்கள் உதடுகளை நன்றாக பெரிதுபடுத்திக் காட்டும்.

அதிகமான பவுடரை பயன்படுத்தும் போது உங்கள் சருமம் வறண்டு போய் இன்னும் வயதானவர்கள் போல் காட்சி அளிப்பீர்கள். மேலும், அதிகமான பவுடரை பயன்படுத்தும் போது உங்கள் கண்களுக்கு கீழே உள்ள பகுதி வறண்டு சரும சுருக்கங்கள் தெரிய ஆரம்பித்து விடும். எனவே கெட்டி தன்மையில்லாத பவுடர் அல்லது மஞ்சள் நிற லேசான பவுடர்களைப் பயன்படுத்துங்கள். இவை உங்கள் கண்களுக்கு கீழே உள்ள கோடுகளை மறைத்து விடும். உங்களையும் இளமையாக காட்டும்.

அதிகமான அடர்ந்த கருப்பு நிற மை பயன்படுத்தும் போது அது உங்கள் கண்களை சோர்வாக்கி காட்டும். நாம் செய்யும் மற்றொரு தவறு கீழ் இமைகளில் உள்ள உள்ளடுக்குகளில் மட்டும் கண் மையை அப்ளை செய்து விட்டு மேல் இமைகளில் அப்ளே செய்யாமல் விட்டுவிடுவோம். இது உங்களுக்கு ஒரு வயதான தோற்றத்தைக் கொடுக்கும். இதற்கு பதிலாக நீங்கள் ஐ லைனரை பயன்படுத்துங்கள். லிக்விடு ஐ மட்டும் ஐ லைனர் கொண்டு அப்ளை செய்யும் போது உங்கள் கண்களை அழகாக காட்டுவதோடு உங்களையும் இளமையாக காட்டும். மஸ்காராவை பயன்படுத்தி உங்கள் இமைகளை அடர்த்தியாக்கி காட்டுங்கள்.

மேலே சொன்னபடி உங்கள் மேக்கப்பை அமைத்துக் கொண்டால் நீங்கள் அழகாகவும், இளமையாகவும் தோற்றமளிப்பீர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com