சுடச்சுட

  
  MN16

  பதினாறு வயதான இந்திய இளைஞி அண்மையில் கின்னஸ்  உலக சாதனை படைத்திருக்கிறார். நிலான்ஷி படேல். குஜராத்தைச் சேர்ந்தவர். தனது கூந்தலை ஐந்தடி ஏழு அங்குலம் நீளத்திற்கு வளர்த்துள்ளது கின்னஸ் உலக சாதனையாக மாறியுள்ளது. இந்தக் கூந்தலை வளர்க்க நிலான்ஷிக்கு பத்தாண்டுகள் தேவைப்பட்டதாம். நிலான்ஷி  இத்தனை நீளக் கூந்தலை எப்படி பராமரிக்கிறார்?

  'ஆச்சரியப்படாதீர்கள்... கூந்தலை அலசுவது வாரத்திற்கு ஒருமுறைதான். கூந்தலைச்  சீவிவிட  சிக்கெடுக்க எனது அன்பான அம்மா உதவுகிறார்.  நீளமான கூந்தல் எனக்கு எந்தப் பிரச்னையையும்  தரவில்லை.  கூந்தலை மடித்துக் கட்டி விளையாட்டுப் பந்தயங்களில் பங்கெடுத்து வருகிறேன். டேபிள் டென்னிஸ் ஆடுகிறேன். இந்தக்  கூந்தல் எனக்கு அதிர்ஷ்டமானது. இல்லையென்றால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் எனக்கு இடம் பிடித்துக் கொடுத்திருக்காதே' என்கிறார்  நிலான்ஷி.

  நிலான்ஷிக்கு  முன் உலகில் அதிக  நீளமான கூந்தலுக்குச் சொந்தக்காரராக இருந்தவர்  கியூப்பிங்  என்ற பதினெட்டு வயதுப் பெண். அவருடைய  கூந்தல் நீளம் ஐந்தடி ஐந்து அங்குலம். அவரை விட இரண்டு அங்குலம் அதிகம் வளர்த்து நிலான்ஷி உலக சாதனை படைத்து பெண்களின் பாராட்டையும் பொறாமையையும் பெற்றுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai