முகம் நல்ல பிரகாசமாகவும், குளுமையாகவும் மாற வேண்டுமா?

ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் நனைத்து முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும், குளுமையாகவும் மாறும்.

தர்பூசணியை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவிட வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள பாதிப்படைந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

சருமத்தில் முதுமைத் தோற்றத்தைத் தரும் சுருக்கங்கள் அதிகம் இருந்தால், அதனைப் போக்க தர்பூசணி பெரிதும் உதவியாக இருக்கும். தர்பூசணி பழத்தை அரைத்து முகத்தில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் இருப்பதால் இதனை உட்கொண்டால் உடல் வறட்சி அடையாமல் இருப்பதுடன், அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்காது.
- மு.சுகாரா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com