வீட்டில் தேயிலை அல்லது காபித் தூள் மிஞ்சிவிட்டதா? உங்கள் முக அழகை அதிகரிக்க அவை உதவும்!

க்ரீன் டீ குடிப்பது உடலுக்கு நல்லது என்று உங்களுக்குத் தெரியும்
வீட்டில் தேயிலை அல்லது காபித் தூள் மிஞ்சிவிட்டதா? உங்கள் முக அழகை அதிகரிக்க அவை உதவும்!

க்ரீன் டீ குடிப்பது உடலுக்கு நல்லது என்று உங்களுக்குத் தெரியும், ஆனால் இது உங்கள் சருமப் பராமரிப்புக்கும் உதவும் என்று உங்களுக்குத் தெரியுமா? சருமத்தை பளபளப்பாக்க நீங்கள் கிரீன் டீயைப் பயன்படுத்தலாம். மேலும் உங்கள் நிறத்தை பளிச்சென்று ஆக்கவும், முகப்பருவை போக்குவதற்கும் க்ரீன் டீ பயன்படும்.
 
க்ரீன் டீயைப் பயன்படுத்தி டோனர் (Toner), ஃபேஸ் மாஸ்க் (Face Mask), க்ளென்ஸர்  (Cleanser) ஆகியவற்றை தயாரித்து முகத்தில் தடவி பிரகாசமான, தெளிவான சருமத்தை குறுகிய காலத்தில் பெறலாம். தேநீர் மற்றும் குளம்பி எனப்படும் டீ மற்றும் காபி உற்சாகம் தரும் பானமாக மட்டுமில்லாமல் முக அழகை மெருகூட்டும் பொருளாகவும் பயன்படுகிறது. 

க்ரீன் டீ இலைகளை தேனுடன் சேர்த்து ஒரு மாஸ்கை உருவாக்கலாம். முதலில் ஒரு கப்பில் க்ரீன் டீயை தயாரிக்கவும், பின்னர் தேநீர் பையை (Tea bag) அகற்றி அதைக் சிறிது நேரம் குளிர விடுங்கள். தேநீர் பையை திறந்து, அதனை வெட்டி ஈரமான தேயிலைகளை ஒரு பாத்திரத்தில் கொட்டவும். தேயிலை இலைகளில் சுமார் 1 டீஸ்பூன் (15 எம்.எல்) தேனைச் சேர்த்து இந்தக் கலவையை ஒன்றிணைத்து பேஸ்ட் போலச் செய்யுங்கள். முதலில் ஒரு ஈரத் துண்டால் முகத்தை சுத்தப்படுத்தியபின், முகத்தில் இந்தப் பேஸ்ட்டை தடவுங்கள். அதன் பின் சில நிமிடங்களில் அது உலர்ந்தபின், வெதுவெதுப்பான நீரில் முகத்தை நன்றாகக் கழுவவும் பின்னர் 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். 

உங்கள் முகத்துக்கான மாய்ஸ்சரைசராக இதைப் பயன்படுத்துங்கள். இந்த மாஸ்க் உங்கள் தோலில் படிந்துள்ள அழுக்குகளை நீக்கி, சருமத்தை புத்துணர்வாக்கும். முகப்பருவுக்கு இதுவொரு சிறந்த சிகிச்சையாகும். இந்த க்ரீன் டீ மாஸ்கை வாரம் ஒரு முறை பயன்படுத்துங்கள். 

தேயிலை மட்டுமல்ல காபித் தூளை வைத்தும் உங்கள் சருமத்தை சீராக்கலாம். காபித் தூள் அரை கப், ஏலக்காய் பொடி 1 டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் 1 1/2 ஸ்பூன் மற்றும் சர்க்கரை 1/2 கப் இவற்றை சேர்ந்து நன்கு கலந்து கொள்ளவும். அதை குளிப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் முகம், கழுத்து, கை கால்களிலும் நன்றாகத் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கவும்.

வீட்டில் கிடைக்கக் கூடிய எளிய பொருட்களை வைத்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள் மற்றும் அழுக்குகளைப் போக்கிக் கொள்ளலாம். கடைகளில் கிடைக்கும் விலை உயர்ந்த அழகு சாதனப் பொருட்களால் பண விரயம் மட்டுமன்றி ஒவ்வாமை உள்ளிட்ட சில பிரச்னையால் சருமம் கெடுவதுடன் விரைவில் வயதான தோற்றம் வந்துவிடும். அழகு என்பது வெளிப்பார்வையில் மட்டுமல்ல அது எளிமையிலும் அன்பான மனதிலும் உள்ளது என்பதை உணர்ந்து நடந்தால் இந்த உலகத்திலேயே நீங்கள்தான் பேரழகி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com