சரும அழகுக்கு தக்காளி ஃபேஷியல்...வீட்டிலேயே செய்யலாம்!

சருமம் புத்துணர்ச்சியுடன் பொலிவாக இருக்க தக்காளி சிறந்த உணவுப் பொருளாகவும் அழகுப் பொருளாகவும் இருக்கிறது. 
சரும அழகுக்கு தக்காளி ஃபேஷியல்...வீட்டிலேயே செய்யலாம்!

சருமம் புத்துணர்ச்சியுடன் பொலிவாக இருக்க தக்காளி சிறந்த உணவுப் பொருளாகவும் அழகுப் பொருளாகவும் இருக்கிறது. 

தக்காளியில் வைட்டமின் சி, ஏ, கால்சியம் உள்ளிட்டவை இருப்பதால், இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இளமையுடன் இருக்கலாம். 

பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துவதால் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கும். 

தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்வதுடன், சருமம் மேலும் பொலிவாக இருக்க தக்காளியைப் பயன்படுத்தி பேஷியல் வீட்டிலேயே செய்யலாம். 

முக்கிய விழாக்களுக்கு முன் பலரும் இன்று அழகு நிலையங்களை நாடுவது வழக்கமாகிவிட்ட நிலையில் சற்று மாற்றாக வீட்டிலேயே இந்த தக்காளி பேஷியலை செய்து பாருங்கள். 

தக்காளி பேஷியல்

முதலில் தக்காளிச் சாறுடன் சிறிது பால் சேர்த்து கலந்து முகத்தில் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். இதனால் முதலில் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும். 

பின்னர் உங்களுடைய முகத்திற்கு ஏற்றுக்கொள்ளும்படியாக கடலைமாவு அல்லது பாசிப்பயறு மாவு, இத்துடன் சிறிதளவு மஞ்சள் தூள், சர்க்கரை சேர்த்து கலக்கவும். தக்காளிச் சாறு சில துளிகள் சேர்த்துக்கொள்ளலாம்.

இரண்டாக வெட்டிவைத்த தக்காளியின் ஒரு பகுதியை எடுத்து கலவையில் மூழ்க வைத்து எடுத்து முகத்தில் ஸ்க்ரப் செய்யுங்கள். குறைந்தது 5 நிமிடம் முகம், கழுத்துப்பகுதி முழுவதும் ஸ்க்ரப் செய்துவிட்டு பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலசி சுத்தமான துணியால் லேசாக துடைத்து எடுங்கள். மூன்றாவதாக இதனை பேஸ் பேக்காகவும் ஒருமுறை போட்டு 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். அவ்வளவு தான்! 

வாரத்தில் ஒருமுறை அல்லது இரு வாரங்களுக்கு ஒருமுறை இந்த பேஷியலை செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com