முகப்பருக்கள் ஏற்படுவது ஏன்? கட்டுப்படுத்துவது எப்படி?

முகத்தின் அழகைக் கெடுக்கும் முகப்பருக்கள் ஆண்களைவிட பெண்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. 
முகப்பருக்கள் ஏற்படுவது ஏன்? கட்டுப்படுத்துவது எப்படி?

முகத்தின் அழகைக் கெடுக்கும் முகப்பருக்கள் ஆண்களைவிட பெண்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. 

பருவநிலை மாற்றம், உடலியல் செயல்பாடுகளில் மாற்றம், உணவுப்பழக்கவழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முகப்பருக்கள் ஏற்படுகிறது. சருமத்தில் எண்ணெய்ப் பசை அதிகரிப்பு, கிருமி தொற்று, ஹார்மோன் சுரப்பு உள்ளிட்டவை முக்கிய காரணங்களாகும்.

சிலர் முகப்பருக்களை கைகளைக் கொண்டு அடிக்கடி தொட்டுக்கொண்டு இருப்பார்கள். அவ்வாறு செய்தால் முகப்பருக்கள் சருமத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவிவிடும். எனவே, முகப்பருக்களின் மீது கை வைக்கக் கூடாது. 

சருமத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் பசையின்றிபார்த்துக்கொள்ளவேண்டும். அதிக எண்ணெய் பசை உள்ள சருமம் கொண்டவர்கள் அவ்வப்போது முகத்தை கழுவ வேண்டும். சோப்பு, க்ரீம் கொண்டோ அல்லது அவ்வப்போது வெறும் தண்ணீரால் கழுவ வேண்டும். முகத்தைத் துடைக்க சுத்தமான துணியை பயன்படுத்த வேண்டும். 

வெயிலில் சென்றால் சன்ஸ்கிரீன் கிரீம்களை பயன்படுத்தலாம். வெளியில் சென்று வந்தவுடன் கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும். தேவையற்ற ரசாயன க்ரீம்களை பயன்படுத்தக்கூடாது. 

அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடக்கூடாது. குறிப்பாக எண்ணெய் பொருள்களை சாப்பிடக்கூடாது. 

சருமத்திற்கு பொலிவு தரும் காய்கறி, பழங்களை சாப்பிடுதல் என உணவுப் பழக்கத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும். 

பயன்படுத்தும் உடைகள், குறிப்பாக தலையணை, டவல் ஆகியவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். 

முகப்பருக்களை விரட்டும் கிருமிநாசினிகள்

► வேப்பிலை சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. வேப்பிலையை அரைத்து முகத்தில் பேக் போடலாம். 

►அடுத்ததாக, முகப்பருக்களை விரட்ட மஞ்சள் மிகச்சிறந்த பொருள். தினமும் காலை, மாலை என இரு நேரங்களில் முகத்தில் மஞ்சள் தடவிவிட்டு குறிப்பாக பருக்கள் இருக்கும் பகுதியில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். வேப்பிலை, மஞ்சள் இரண்டையும் சேர்த்தும் பயன்படுத்தலாம். 

►முகத்தைக் கழுவிய பின்னர் ரோஸ் வாட்டர் அல்லது பன்னீரை தடவி வர பருக்கள் இன்றி முகம் பொலிவுடன் இருக்கும். சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி விடும். 

►மூன்றாவதாக சந்தனம் சருமத்திற்கு குளிர்ச்சி தரக்கூடியது. உடல் வெப்பநிலை காரணமாகவும் பருக்கள் வரலாம். எனவே, முகத்தில் சந்தனத்தை அப்ளை செய்துவிட்டு சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். 

►கற்றாழை சருமத்திற்கு நீரேற்றம் தரக்கூடியது. முகப்பருக்களை சரிசெய்யக்கூடியது. 

►இதுபோன்ற வழிமுறைகளைப் பின்பற்றியும் முகப்பருக்கள் குறையவில்லை எனில் தோல் மருத்துவரை அணுகுவது நல்லது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com