சரும நிறத்தை அதிகரிக்க இயற்கையான 10 அழகுக் குறிப்புகள்!

'கருப்பு தான் அழகு' என்று தேற்றிக் கொண்டாலும் நல்ல நிறமுடையவர்களைப் பார்த்தால் கருப்பாக இருப்பவர்களுக்கு சற்று பொறாமையாகத்தான் இருக்கும்
சரும நிறத்தை அதிகரிக்க இயற்கையான 10 அழகுக் குறிப்புகள்!

'கருப்பு தான் அழகு' என்று தேற்றிக் கொண்டாலும் நல்ல நிறமுடையவர்களைப் பார்த்தால் கருப்பாக இருப்பவர்களுக்கு சற்று பொறாமையாகத்தான் இருக்கும். 

அப்படி இருப்பவர்கள் தங்களுடைய நிறத்தை மெருகேற்றிக்கொள்ள செயற்கை ரசாயனங்கள் நிறைந்த கிரீம்கள் என பல வழிகளைக் கையாள்வர். 

ஆனால் சருமத்தின் நிறத்தைக் கூட்டுவதற்கும் முகம் பொலிவடைவதற்கும் இயற்கை வழிமுறைகள் பல உள்ளன. 

சில குறிப்புகள்: 

♦ கடலை மாவுடன் மஞ்சள் சேர்த்து சருமம் முழுவதும் தேய்த்து குளித்துவர பொலிவு கூடும். இத்துடன் சிறிது தயிரும் சேர்த்துக்கொள்ளலாம். 

♦ அரிசி மாவுடன் டீத்தூளின் சிறிது டிக்காஷன் சேர்த்து கலக்கவும். இத்துடன் சிறிது தேன் சேர்த்து முகத்தில் பேக் போடவும். 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். 

♦ வெள்ளரிக்காய் இயற்கையாகவே சருமத்திற்கு நிறத்தை அள்ளிக்கூடியது. வெள்ளரிக்காயை அப்படியே பேஸ்ட் செய்து முகத்தில் அப்ளை செய்யலாம். 

♦ சுத்தமான காய்ச்சாத மாட்டுப்பால் ஒரு ஸ்பூன் எடுத்து பஞ்சு கொண்டு நனைத்து முகத்திற்கு மசாஜ் செய்யுங்கள்.

♦ தேனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பேக் போடலாம். 

♦ உருளைக்கிழங்கு பேஸ்டை அப்படியே முகத்தில் தடவலாம். அத்துடன் சிறிது பால் சேர்த்தும் முகத்த்தில் பேக் போடலாம். 

♦ தக்காளிச் சாறு ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். அத்துடன் சிறிது சர்க்கரை சேர்த்து கலந்து சருமத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். 

♦ இரவு தூங்குவதற்கு முன்னர் ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து முகம் முழுவதும் மசாஜ் செய்யுங்கள். 

♦ ஆலிவ் எண்ணையை முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். இது சருமத்தில் உள்ள கருமைகளை நீக்குகிறது. 

♦ குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து நன்றாக ஊறியவுடன் அந்த கலவையை முகத்தில் பேக் போட்டு காய்ந்ததும் கழுவி விடுங்கள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com