டைட்டன்ல இனி புடவைகளும் வாங்கலாமாமே!

ஃபேஷன் உலகுக்கு டைட்டனில் இருந்து இன்னொரு தரமான பிராண்ட் கிடைத்தது என்ற வகையில் இந்த முயற்சியைப் பாராட்டலாம்.                                                                   
டைட்டன்ல இனி புடவைகளும் வாங்கலாமாமே!

டைட்டன் நிறுவனம் சோதனை முயற்சி அடிப்படையில் இனிமேல் பெண்களுக்கான பாரம்பரிய உடைகளை விற்பனை செய்யும் நிலையங்களையும் தொடங்க இருக்கிறதாம். டாட்டா குழுமத்தைச் சார்ந்த டைட்டன் முன்பே ஃபாஸ்ட் டிராக் உள்ளிட்ட பிற பிராண்ட் கைக்கடிகாரங்களை டைட்டன் பிராண்டின் கீழ் விற்பனை செய்வது நமக்குத் தெரிந்த விசயமே! இந்நிறுவனம் ’தனிஷ்க்’ என்ற பெயரின் கீழ் நகை விற்பனையும், டைட்டன் ஐ பிளஸ் என்ற பெயரில் ஸ்டைலிஷ் ஆன மூக்குக் கண்ணாடிகளும் விற்பனை செய்து வருகிறது. வெற்றிகரமான பிற முயற்சிகளைப் போலவே இனி வருங்காலத்தில் தனிஷ்க் ஷோரூம் செல்லும் பெண்கள் அங்கேயே தங்களுக்குத் தேவையான பட்டுப்புடவைகள் அல்லது பிராண்டட் உடைகளையும் தேர்வு செய்து வாங்கிக் கொள்ளும் வசதி வந்து விடும். ரிலயன்ஸ் நிறுவனத்தார் ரிலயன்ஸ் டிரெண்ட்ஸ், ரிலயன்ஸ் ஃப்ரெஷ், ரிலயன்ஸ் கிரீன் டிரெண்ட்ஸ் என்று ரீடெயில் மார்கெட்டில் தங்களது எல்லைகளை விரித்துக் கொண்டே செல்வது போலவே டாட்டாவும் தனது எல்லைகளை  விரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பொதுமக்களுக்கு என்ன பலன் என்று பார்த்தால்... பெரிதாக ஒன்றுமில்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. 

சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ், போன்ற பெரிய ஜவுளிக் கடல்கள் நகைக்கடை, துணிக்கடை, அழகு சாதனப் பொருட்களுக்கான கடை, கேண்டீன் என்று ஒரே இடத்தில் அனைத்தையும் விற்று மக்களை செலவு செய்யத் தூண்டுவதைப் போலத்தான் இதுவும். வாட்ச் வாங்கலாம் என்று டைட்டன் ஷோரூம் செல்பவர்கள் இனிமேல் தனிஷ்க் அவுட்லெட்டில் ஏதாவதொரு நகையும், டைட்டன் ஐ பிளஸில் உடைக்குப் பொருத்தமாக லென்ஸ்களும் வாங்கி மாட்டிக் கொள்ள வேண்டியது தான் பாக்கி. ஃபேஷன் உலகுக்கு டைட்டனில் இருந்து இன்னொரு தரமான பிராண்ட் கிடைத்தது என்ற வகையில் இந்த முயற்சியைப் பாராட்டலாம்.                                                                   
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com