Lifestyle shopping
Lifestyle shopping

லைஃப்ஸ்டைல் ஷாப்பிங் யாருக்கு அனுகூலமானது?!

அவற்றில் கடை வாடகை, ஏ சி கட்டணம், தொழிலாளர் சம்பளம் என்ற எந்தப் பிரச்னைகளும் இன்றி இத்தகைய நிறுவனங்கள் மிக சல்லிசான விலையில் பொருட்களை விற்பனை செய்கின்றன.

ஒரு விஷயம் கவனத்தீர்களா?! முன்பெல்லாம் துணிக்கடைக்கு சென்றால் ஆடைகள் மட்டும் வாங்கி விட்டு வெளிவந்து விடலாம். இப்போது அது முடியாது. கண்டிப்பாக கீழ்தளத்திலோ அல்லது பக்கவாட்டிலோ ஜவுளிக்கடையுடன் இணைந்திருக்கும் அக்ஸஸ்ஸரீஸ் கடைகளுக்குள் சும்மாவேணும் தலை காட்டாமல் நம்மால் நகர்ந்து விட முடிவதில்லை. அங்கே ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்பத்தில் நம் அனைவருக்குமான லைஃப்ஸ்டைல் ஷாப்பிங்கை முடித்துக் கொள்ளலாம். 

லைஃப்ஸ்டைல் ஷாப்பிங்கா? அப்படின்னா?

ஃபேமிலி லைஃப்ஸ்டைல் ஷாப்பிங்..
ஃபேமிலி லைஃப்ஸ்டைல் ஷாப்பிங்..

அதென்ன புதிதாக எதையோ கிளப்பி விடுகிறீர்களே? என்று யோசிக்கத் தேவையில்லை. ஆடைகள், அவற்றுக்குத் தோதான செயற்கை அலங்காரப் பொருட்கள், காஸ்மெடிக்ஸ் அயிட்டங்கள், ஃபேஷன் உபகரணங்களான பிராண்டெட் ஹேண்ட் பேக்குகள், பர்ஸுகள், ஆண்களின் பெல்ட்டுகள், வாலட்டுகள், டை, கிச்சன் நாப்கின்கள், குழந்தைகளுக்குத் தேவையான ஸ்டேஷனரிகள், பிராண்டெட் பேனாக்கள், பென்சில்கள், பொம்மைகள், இதர விளையாட்டுச் சாமான்கள் என எல்லாமே ஒரே இடத்தில் நம்மால் ஷாப்பிங் செய்து கொள்ள முடிந்தால் அத்தகைய ஷாப்பிங் மால்களை லைஃப்ஸ்டைல் ஷாப்பிங் மால்கள் என்று நாம் கருதலாம். அதாவது ஒவ்வொன்றுக்காகவும் நாம் வெவ்வேறு இடங்களைத் தேடி அலைந்து கொண்டிராமல் ஒரே இடத்தில், ஒரே கூரையின் கீழ் ஒட்டுமொத்த ஷாப்பிங்கையும் முடித்துக் கொள்ள முடிந்தால் அது தான் லைஃப்ஸ்டைல் ஷாப்பிங்.

இப்போ புரியுதா?

சரி இந்த லைஃப்ஸ்டைல் ஷாப்பிங்கால் யாருக்கு அனுகூலம்?

நிச்சயமாக பணம் படைத்தவர்களுக்குத்தான். கை நிறைய சம்பாதிப்பவர்களுக்கு இம்மாதிரியான ஷாப்பிங் மால்களில் ஒட்டப்பட்டிருக்கும் விலைப்பட்டியலைக் கண்டு மயக்கம் வராது. நடுத்தர வர்க்கத்தினருக்கு இது கொஞ்சம் சிரமத்திற்குரியது மட்டுமல்ல, ஏமாற்றம் தரக்கூடியதுமாக இருந்தாலும் கூட அவர்களையும் திருப்திப் படுத்த வேண்டுமென இத்தகைய லைஃப்ஸ்டைல் ஷாப்பிங் அனுபவத்தை வழங்க விரும்பும் நிறுவனங்கள் ஆன்லைன் ஷாப்பிங் வசதிகளையும் தருகின்றனவே. 

ஆன்லைன் லைஃப்ஸ்டைல் ஷாப்பிங்..

ஆன்லைன் லைஃப்ஸ்டைல் ஷாப்பிங்... 
ஆன்லைன் லைஃப்ஸ்டைல் ஷாப்பிங்... 

அவற்றில் கடை வாடகை, ஏ சி கட்டணம், தொழிலாளர் சம்பளம் என்ற எந்தப் பிரச்னைகளும் இன்றி இத்தகைய நிறுவனங்கள் மிக சல்லிசான விலையில் பொருட்களை விற்பனை செய்கின்றன. கூகுளைத் திறந்தாலோ, சமூக ஊடகங்களில் கணக்கு வைத்திருந்தாலோ நிச்சயம் அனைவருமே இத்தகைய ஷாப்பிங் எக்ஸ்பீரியன்ஸைப் பெறாமல நழுவ வாய்ப்பில்லை. அமேஸான், பீச்மோட், வயோலா, ஸ்னாப் டீல், ஃபிலிப் கார்ட் என பரந்து விரிந்து கிடக்கிறது இத்தகைய நிறுவனங்களின் லைஃப்ஸ்டைல் ஷாப்பிங் சாம்ராஜ்யங்கள். உள்ளே சென்று விட்டு வெறுமே விண்டோ ஷாப்பிங் செய்து விட்டு வெளியில் வந்து விடலாம் என்று நினைத்துத் தான் அதில் நுழைவோம். ஆனால், வெகு நிச்சயமாக குறைந்த பட்சம் அவரவர் பணவசதிகளுக்கேற்ப 500 ரூபாய்க்காவது ஏதேனும் பொருளை கேஸ் ஆன் டெலிவரியிலோ அல்லது கடனட்டை டெலிவரியிலோ ஆர்டர் செய்யாமல் நாம் தப்ப முடிவதில்லை.

இத்தகைய லைஃப் ஸ்டைல் ஷாப்பிங் அனுபவங்கள் ஒரு பக்கம் அனுகூலமானதாகத் தோன்றினாலும் மறுபுறம் ஏமாற்றங்களையும் தராமலிருப்பதில்லை.

இப்படி ஆன்லைனில் ஸ்மார்ட் ஃபோன் ஆர்டர் செய்த ஒருவருக்கு வெறும் செங்கற் கட்டிகளை அனுப்பி ஏமாற்றும் நிறுவனங்களும் இருக்கின்றன. தரமான நிறுவனங்கள் எவை என்பதை அந்தந்த நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் வழங்கி இருக்கும் ஸ்டார்களைக் கொண்டு எது தரமானது என்பதைக் கண்டறிய முயற்சிக்கலாம்.

வாடிக்கையாளர்கள் தங்களது நுகர்வோர் உரிமைகளில் தெளிவாக இருத்தல் நலம்!

கடைகளுக்கு நேரில் சென்று வாங்குவதாக இருந்தாலும் சரி, ஆன்லைனில் ஷாப்பிங் செய்து பெறுவதாக இருந்தாலும் சரி இரண்டிலுமே வாடிக்கையாளர்கள் மிகவும் தெளிவாக இருந்தால் போதும், மக்கள் தங்களுக்கான நுகர்வோர் உரிமைகளை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்து விட்டால் எந்த ஷாப்பிங்கிலும் ஏமாற்றத்தைப் பெருமளவில் தவிர்த்து விடலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com