உணவுப் பழக்கத்தில் இருக்கும் சின்னச் சின்ன தவறுகள்

சமையலிலும் சரி, சாப்பிடுவதிலும் சரி நாம் செய்யும் சின்னச் சின்ன தவறுகளை நாம் அறிந்து கொள்ளாமலேயே இருந்து விடுகிறோம். இதனால் பெரிய பாதிப்பில்லை என்றாலும்.. அதனை மாற்றிக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கிய
உணவுப் பழக்கத்தில் இருக்கும் சின்னச் சின்ன தவறுகள்
உணவுப் பழக்கத்தில் இருக்கும் சின்னச் சின்ன தவறுகள்

சமையலிலும் சரி, சாப்பிடுவதிலும் சரி நாம் செய்யும் சின்னச் சின்ன தவறுகளை நாம் அறிந்து கொள்ளாமலேயே இருந்து விடுகிறோம். இதனால் பெரிய பாதிப்பில்லை என்றாலும்.. அதனை மாற்றிக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

ஒரு நாளைக்கு தினமும் மூன்று வேலை உணவு உண்ணுங்கள். சிலர் காலை உணவை தவிர்ப்பதை வழக்கமாகக் கொள்வார்கள். அதுவும் தவறு, இரவு உணவின் அளவு அதிகமாக இருப்பதும் தவறு.

இரவில் உறங்கும் முன்பு, அதிக உணவு சாப்பிடுவதைத் தவிர்த்து விடுங்கள். இதனால், உடலில் வாயுத் தொல்லை ஏற்படலாம்.

ஒருவர் மன அழுத்தம் அல்லது கோபத்தில் இருந்தால் அதிகமாக சாப்பிடுவார் என்பதெல்லாம் தவறு. பிரச்னையின்போது அதிகமாக சாப்பிட்டால் அது மேலும் பிரச்னையை அதிகரிக்கவே செய்யும்.

பிள்ளைகள் எதையாவது செய்தால், பரிசாக சாக்லேட், பிஸ்கட் போன்றவற்றை வாங்கிக் கொடுப்பதைத் தவிருங்கள். அதற்கு பதிலாக, குழந்தைகளுக்கு பழங்கள், கொட்டை வகைகளை வாங்கிக் கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

கோடைக் காலத்தில் வயிறு முட்ட உணவருந்த வேண்டாம். அதுவும் கடும் வெயிலில்.

உணவில் சைவ உணவு சிறந்தது என்றாலும், சைவப் பிரியர்கள் தங்களது உணவில், உடலுக்குத் தேவையான புரதம், இரும்புச் சத்துப் போன்றவை கிடைக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.

பழங்கள், காய்கறிகளை அலசும் போது ஒரு கிண்ணத்தில் தண்ணீர் விட்டு அதில் வைத்துக் கழுவாமல், குழாயில் தண்ணீர் கொட்டும்போது நேரடியாக பழங்கள், காய்கறிகளை கழுவுவது சிறந்தது.

பழங்கனை அசுத்தமான தண்ணீரில் கழுவி சாப்பிடக் கூடாது. குடிப்பதற்கு உகந்த தண்ணீரில் கழுவி சாப்பிடுவதும், குழந்தைகளுக்குக் கொடுப்பதும் உகந்தது.

பாதி வெந்த அல்லது வேகாத உணவுகளை எந்தக் காரணத்தைக் கொண்டும் சாப்பிட வேண்டாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com