செப் 25, 2016 நியூஜெர்ஸி:
வட அமெரிக்க கர்னாடக இசைச்சங்கமான CMANA தங்களது இசைச்சங்கத்தின் சார்பாக வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதான ”சங்கீத சாகரா”வை இந்த வருடம் பிரபல வயலின் இசைக்கலைஞர் பத்மஸ்ரீ கன்யாகுமாரிக்கு வழங்கி கௌரவித்திருக்கிறது.
நியூஜெர்ஸி ஸ்காட்ச் பிளெயினில் நடைபெற்ற இந்த பிரமாண்ட விழாவில் முன்னாள் நியூஜெர்ஸி சட்ட மன்ற உறுப்பினர் உபேந்திர சிவுகுலா, உலக இசை நிறுவனத்தைச் சார்ந்த டாக்டர். ராபர்ட் பிரவுனிங் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முந்தைய வருடங்களில் இதே வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வென்றவர்களான செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர், எம்.எஸ். சுப்புலட்சுமி, டி.கே. பட்டம்மாள் உள்ளிட்டோரைப் போலவே பத்மஸ்ரீ கன்யாகுமரியும் தனது பெருமை மிகுந்த வயலின் இசைக்கலையின் மீது மிகுந்த பெருமிதமும், அர்ப்ப்பணிப்பு உணர்வு கொண்டவர் என்பதோடு இசையின் மீது ஆர்வம் கொண்ட எதிர்கால சந்ததியினருக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாகவும் இருக்கிறார் என்பதால் CMANA தனது 10 வது வாழ்நாள் சாதனை விருதுக்குரியவராக அவரைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் பெருமை கொள்கிறது என CMANA தற்போதைய தலைவர் சௌம் சௌம்யன்தெரிவித்தார்.
இந்த பெருமைக்குரிய நிகழ்வில் பத்மஸ்ரீ கன்யாகுமரியுடன் வயலினிஸ்ட் ராஜிவ் முகுந்தன், மிருந்தங்கம் பத்ரி சசிக்குமார் இருவரும் இணைந்து பார்வையாளர்களுக்கு மிகச் சிறந்த இசைவிருந்தை அளித்தனர்.
விழாவில் CMANA முன்னாள் தலைவர் டாக்டர். சௌந்திரம் ராமசாமி கன்யாகுமரியை இனி வரும் சந்ததியினரில் பெண் வயலினிஸ்டுகளுக்கு 'மிகச் சிறந்த வழிகாட்டி' எனக்குறிப்பிட்டுப் பாராட்டினார். அதைத் தொடர்ந்து CMANA இந்நாள் தலைவர் சௌம். சௌம்யன் கன்யாகுமரிக்கு 'பட்டயம்' வழங்கி சிறப்பித்தார். அவரைத் தொடர்ந்து டாக்டர். ராபர்ட் பிரவுனிங் பதக்கம் வழங்கி கௌரவித்தார். நிகழ்ச்சியில் பேசிய உபேந்திர சிவுகுலா CMANA வின் நாற்பது வருடத்தைய தொடர்ச்சியான இசை விழாக்களைப் பாராட்டி விட்டு, பத்மஸ்ரீ கன்யாகுமரியிடம் அவரது தொடர்ந்த இசைப் பங்களிப்புகளுக்காக நன்றி கூறினார்.
வட அமெரிக்க இசைச் சங்கமான CMANA வின் இப்பெரும் இசைவிழாவில் மறைந்த இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களது இசைச் சாதனைகளை நினைவு கூறும் வகையில் இளம் இசை ஆர்வலர்களை ஒன்று திரட்டி அவர்களுடன் பிரபல கர்நாடக இசைப் பிபலங்களான ரஞ்சனி, காயத்ரி உள்ளிட்டோர் பங்கு பெற்ற அருமையான இசை நிகழ்ச்சி நடத்தப் பட்டது. விழா பற்றிய முழுமையான தகவல்களுக்கு CMANA ன் http://www.cmana.org எனும் தளத்தைப் பார்வையிடலாம்.
பத்மஸ்ரீ கன்யாகுமரிக்கு வழங்கப்பட்ட ”சங்கீத சாகரா” பட்டமளிப்பு விழாவைக் காண்பதற்கான யூ டியூப் விடியோ இணைப்பு கீழே;