நெகிழ வைக்கும் பணியைச் செய்த பள்ளி மாணவிகள்!

பெங்களூரைச் சேர்ந்த  நிகிதா நச்னானி, நிகாரிகா ஜடேஜா மற்றும் அமதுல்லா வாகன்வாலா ஆகியோர் ஒரு வித்தியாசமான   சாதனையைச் செய்துள்ளனர்.
நெகிழ வைக்கும் பணியைச் செய்த பள்ளி மாணவிகள்!

பெங்களூரைச் சேர்ந்த  நிகிதா நச்னானி, நிகாரிகா ஜடேஜா மற்றும் அமதுல்லா வாகன்வாலா ஆகியோர் ஒரு வித்தியாசமான   சாதனையைச் செய்துள்ளனர்.

புற்றுநோய், டைபாய்ட் போன்றவற்றினால், சிலருக்கு தலைமுடி அதிகளவில் கொட்டிவிடுவதுண்டு. இதனால் பலருடைய கிண்டலுக்கும் ஆளாக நேரிடும் என கூச்சப்பட்டு, வெளியில் நடமாட  தயங்குகிறார்கள். 

இத்தகையவர்களுக்கு, ஒரு  'விக்'  தயார்  செய்து கொடுத்தால் எப்படி இருக்கும் என அமதுல்லா வாகன்வாலா மற்றும் நிகாரிகா ஜடேஜா யோசித்தனர். அப்போது இருவரும் ப்ளஸ் ஒன் மாணவிகள்.

விக் அணிவதன்  மூலம்  முடிக்  கொட்டியப் பெண்கள் மன உளைச்சலில் இருந்து விடுப்பட்டு. மற்றவர்களைப் போன்று  அவர்களும் நடமாட முடியும்  என்று நம்பினார்கள்.

இதற்கு தேவையான தலைமுடியை சேகரித்து அனுப்பினால் லண்டனில் உள்ள 'லிட்டில் பிரின்ஸஸ் டிரஸ்ட்' என்ற சமூக சேவை இயக்கம், விக்காக மாற்றி, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அனுப்பி வைக்கும். ஆனால் பொதுவாக இது போன்று தலைமுடிகளை சேகரிக்கும் நிறுவனங்கள், தலைமுடி 12-13 அங்குலம் வரை தேவை என வலியுறுத்தின. ஆனால் லண்டன் லிட்டில் பிரின்ஸஸ் டிரஸ்ட் நிறுவனம், குறைந்த அளவான 7 அங்குலம் இருந்தாலும் போதும் என்று கூறியதால்,  தலைமுடி குறித்து பொதுமக்களிடம் கேன்வாஸ் செய்து,  முடியைப் பெற்று அனுப்பி வைப்பது என இருவரும் முடிவெடுத்தனர்.

இதற்காக ‘HAIR FOR HAPPINESS’ என்ற இயக்கத்தை தொடங்கி, பேஸ்புக், பள்ளிகள் மற்றும் பல ஐ.டி.நிறுவனங்களுக்குச் சென்று, தலைமுடி கேட்டும் கேன்வாசிங் செய்தனர்.

இதற்கு முதன்முதலாக தான்யா குப்தா என்ற பெண், தன் தலைமுடியை வெட்டித் தர சம்மதித்தார். தற்போது எங்கள் லிஸ்டில் 100 பெண்களை தாண்டி இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. 10 பேரிடமாவது முடியைப் பெற முடியுமா? என நினைத்தோம். ஆனால் இது  பெரிய வெற்றி.  இன்று  லண்டனுக்கு முடியை அனுப்பும் செலவை பல ஐ.டி.நிறுவனங்கள் ஏற்றுக் கொள்கின்றன.

இதனிடையே நிகாரிகா ஜடேஜா மற்றும் அமதுல்லா பட்டப்படிப்பிற்கு மாறிவிட்டதால்.  தற்போது,  தலைமுடி குறித்த கேன்வாசிங்கை  நிகிதா நச்னானி என்ற பள்ளி மாணவி தொடருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com