மெத்து மெத்தென்று பஞ்சு போல் இட்லி வேண்டுமா? இதோ டிப்ஸ்

நேற்று சுட்ட  சப்பாத்தி மீதமிருந்தால் அடுத்த நாள் காலை மீதமிருக்கும் சப்பாத்தியை இட்லி குக்கரில்
மெத்து மெத்தென்று பஞ்சு போல் இட்லி வேண்டுமா? இதோ டிப்ஸ்

நேற்று சுட்ட  சப்பாத்தி மீதமிருந்தால் அடுத்த நாள் காலை மீதமிருக்கும் சப்பாத்தியை இட்லி குக்கரில் லேசாக ஆவியில் வேகவைத்து சாப்பிட்டால் சப்பாத்தி மிருதுவாக  இருக்கும்.

குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் பொருள்களை  அலுமினிய  பாயில் பேப்பரில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாது.

மிக்ஸியை துடைக்கும்போது வெளிப்புறத்தில்  சிறிது டூத் பேஸ்ட்டை  வைத்து தேய்த்துத் துடைத்தால்  பளீரென்று இருக்கும்.

மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காயை வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.

இட்லிக்கான அரிசியை வெந்நீரில் ஊற வைத்து அரைத்தால், இட்லி பஞ்சு போன்று இருக்கும்.

பகலில் மீந்த சாதத்துடன் சிறிது கடலைமாவு, கோதுமை மாவு சேர்த்துக் கெட்டியாக  அரைத்து அதில் நறுக்கின வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், தேவையான உப்பு சேர்த்துக்  கிளறி காயந்த எண்ணெய்யில் கிள்ளிப் போட்டு பொரித்தெடுத்தால் சுவையான பக்கோடாக்கள் தயார்.

உருளைக்கிழங்கு மசால் தோசை செய்யும் போது தோசையில் மசாலா வைப்பதற்கு முன் தேங்காய் சட்னி இரண்டு  தேக்கரண்டி எடுத்து தோசையின் மேல் பரவலாக தேய்த்து பிறகு மசாலாவை வைத்து மூடி எடுக்கவும். தோசை தனிச் சுவையுடன் இருக்கும்.

தேங்காய்த் துருவலுடன் ஊற வைத்து அரைத்த வேர்க்கடலையைச் சேர்த்து, தேங்காய் பர்பி செய்தால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

சேமியா கிச்சடி செய்யும் போது தண்ணீர் அதிகமாகி விட்டால் தளதளவென்று ஆகிவிடும். இதைச் சரி செய்ய, அவலை மிக்ஸியில் பொடியாக்கி  கிச்சடியுடன் சேர்த்தால்  கிச்சடி சுவையாக இருக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com