பூச்சிகள் உங்களை தொல்லை செய்கிறதா? இதோ சில வழிமுறைகள்!

வீட்டினுள் எறும்புப் புற்று இருந்தால் அதைச் சுற்றி கொஞ்சம் பெருங்காயத்தை தூவி விட்டால் போதும் எறும்புத் தொல்லை இருக்காது. 
பூச்சிகள் உங்களை தொல்லை செய்கிறதா? இதோ சில வழிமுறைகள்!

வீட்டினுள் எறும்புப் புற்று இருந்தால் அதைச் சுற்றி கொஞ்சம் பெருங்காயத்தை தூவி விட்டால் போதும் எறும்புத் தொல்லை இருக்காது. 

ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு தேக்கரண்டி உப்புதூள், கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது.

கடையில் மூக்குப் பொடி வாங்கி வந்து தண்ணீரில் கரைத்து எறும்புப் புற்றின் மேல் தெளித்து விடுங்கள். எறும்புகள் மாயமாய் மறைந்து போகும்.

துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ், தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுகள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.

பொருட்களை கறையான் அரிக்காமல் இருக்க கற்பூரத்தைப் பொடி செய்து தூவி வையுங்கள்.

வெயில் காலத்தில் எங்கு நோக்கினும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். வீட்டைக் கழுவும்போது நீரில் சிறிது உப்பைச் சேர்த்துப் பின்பு கழுவுங்கள், காய்ந்த பின் அறையில் ஈக்கள் வராது.

இரவில் படுப்பதற்கு முன் ப்ளீச்சிங் பவுடரைச் சிறிது எடுத்து கழிப்பறையிலும், குளியலறையிலும் தூவி விட, கரப்பான் பூச்சித் தொல்லை இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com