சுடச்சுட

  

  குங்குமம் முதல் அப்பளம் வரை! ரூ.10 லட்சம் கோடிக்கு வர்த்தகமான 'மேட் இன் சீனா'

  By சினேகா  |   Published on : 08th April 2019 02:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  New-Fearticle-Image-99

   

  ஒரு பொருளை குறைந்த விலைக்கு நீங்கள் வாங்க முடியும் என்றால் அது சீனா ஐட்டம் என்று குழந்தைகள் கூட சொல்லிவிடும். டிவிடி ப்ளேயர்கள் முதல் ஐபாட் வரை  முன்பு எலக்ட்ரானிக் பொருட்களில் மட்டும் கோலோச்சிக் கொண்டிருந்த சீனப் பொருட்களின் வர்த்தகம், தற்போது அனைத்துவிதமான பொருட்களிலும் உருமாறி நம் ஊர்களில் விற்பனையாகி வருகிறது என்பது அண்மைக்கால உண்மை. உதாரணமாக குங்குமம், பெண்கள் பயன்படுத்தும் கோலாபூரி செருப்பு, குழந்தைகள் விரும்பிப் படிக்கும் காமிக் புத்தகம், அப்பளம் உள்ளிட்டு சீனா தயாரிக்கும் பொருட்கள் நம்மூர்களில் வலம் வரத் தொடங்கியுள்ளன.

  இப்படி நமது கலை, பாரம்பரிய விஷயங்கள் என அனைத்தையும் நகல் எடுத்து வேறு ஒரு இடத்தில் தயாராகி இங்கேயே விற்பனைக்கு வருவதுதான் இதன் வெற்றி. மதுபாணி மற்றும் கலம்காரி டிசைன் உடைகள்,  மேக் அப் சாதனம், நகை, பொம்மை, ப்ளாஸ்டிக் ஃபர்னிச்சர் என வீட்டுப் பொருட்கள் எதை எடுத்தாலும் அதில் ‘மேட் இன் சீனா’ என்று பொரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

  பெரும்பாலான வீடுகளில் அடிப்படை தேவைகள் கூட சீனப் பொருட்களாக இருப்பது மறுக்க முடியாத உண்மை. நகர்ப் பகுதி மட்டுமல்லாது புறநகர் பகுதிகளிலும் கூட ஸ்டேஷனரி கடைகளிலிருந்து பாத்திரக் கடை வரை இந்த ஆதிக்கம் அதிகரித்து வருவது கண்கூடு. இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதி பொருட்களில் சீனாவிலிருந்து இறக்குமதியாவது குறைந்த அளவு என்ற போதிலும், விலை குறைவான இத்தகைய பொருட்களுக்கான மவுசு சிறு வியாபாரிகளிடையே அதிகரித்து வருகிறது. 

  சீனாவில் இருந்து 8,000-க்கும் மேற்பட்ட வகை பொருட்களை இந்தியாவுக்கு இறக்குமதி ஆகிறது, எட்டு இலக்க ஐக்கிய குறியீட்டு எண் HSN, வர்த்தக முறைகளை வகைப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது.

  கடந்த ஆண்டு (2018-19) ஜனவரி 2019 வரை இந்தியாவின் மொத்த இறக்குமதியான 32 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 2018-19 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை கடந்த 10 மாதங்களில் சீனாவில் இருந்து 4.2 லட்சம் கோடியும், 2017-18-ல் 4.9 லட்சம் கோடி ரூபாயும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

  இனி மேட் இன் சீனா என்று உங்கள் உப்பில் இருந்தால் கூட அதிசயிக்க வேண்டாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai