சுடச்சுட

  
  spy

  வீட்டில் இருந்து வெளியே செல்லும் நமது பிள்ளைகள், மீண்டும் வீடு திரும்பும் வரை பெற்றோர்களுக்கு நிம்மதி என்பதே கிடையாது. அதுவும் இன்றைய காலச் சூழலில், குழந்தைகளை நிழல் போன்று கண்காணிக்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாக உள்ளது.

  வெளியே செல்லும் பிள்ளைகளை அவ்வப்போது செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு பெற்றோர் விசாரித்தாலும், அவர்கள் வீடு திரும்பும் வரை நிம்மதி நிலவாது. அதிலும், செல்லிடப்பேசி அழைப்பை அவர்கள் எடுக்கவில்லை என்றால் பெற்றோரின் அச்சம் உச்சத்திற்குச் சென்றுவிடும்.

  இது போன்ற பிரச்னைக்குத் தீர்வு காண 'ஃபேமிலி லொகேட்டர்' ஆப்களைப் பயன்படுத்தலாம். ஆன்ட்ராய்டு பிளே ஸ்டோரில் இந்த ஆப்கள் ஏராளமான உள்ளன. அதில் 'லைப் 360' என்ற ஆப்பின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்தவுடன் நமது செல்லிடப்பேசி எண், இ-மெயில் முகவரி, வீட்டு முகவரி ஆகியவற்றைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த ஆப்பில் யாரையெல்லாம் உறுப்பினர்களாக சேர்க்க நினைக்கிறோமோ அவர்களுக்கு இணைப்பை அனுப்ப வேண்டும். இணைப்பு குறியீட்டைப் பதிவு செய்து அவர்கள் உங்கள் வளையத்தில் சேர்ந்துவிட்டால் போதும்; அந்த நபர்கள் வெளியே எங்கு உள்ளார்கள்; சேர வேண்டிய இடத்துக்கு சென்றடைந்துவிட்டார்களா என்பதை நாம் வரைபடத்தின் மூலம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இதற்காக நாம் முழு நேரமும் செல்லிடப்பேசியைப் பார்த்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. சேர வேண்டிய இடத்துக்கு அவர்கள் சென்றவுடன் நமது செல்லிடப்பேசியில் அலர்ட் மெசேஜ் வந்துவிடும்.

  அது மட்டுமல்ல, இந்த ஆப்பின் குடும்ப வளையத்தில் உள்ளவர்கள் யார் யார் எங்கு உள்ளார்கள் என்பதை அவர்களைத் தொடர்பு கொள்ளாமலும், மெசேஜ் அனுப்பாமலும் உடனடியாகத் தெரிந்து கொள்ளலாம். அவர்கள் ஏதாவது ஆபத்தில் சிக்கினாலும் இந்த ஆப் உடனடியாக அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துவிடும். ஆயிரக்கணக்கானோர் கூடக் கூடிய பொது இடங்களில் நமது உறவினர்களுடன் இணைப்பில் இருக்கவும் இந்த ஆப் உதவுகிறது. இந்த ஆப்பைச் செயல்படுத்த இணைய பயன்பாடு அவசியமாகும்.

  இந்த ஆப் - ஐ பிறரை வேவு பார்ப்பதற்காகப் பயன்படுத்த முடியும் என்பதுதான் இதனுடைய இன்னொரு முகமாகும். 

  - அ.சர்ஃப்ராஸ்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai