நாய்களுடன் பழகுங்கள்: மனச்சிதைவு நோய் வராது!

நாய்களுடன் பழகிய குழந்தைகளுக்கு  பிற்காலத்தில் மனச்சிதைவு நோய் ஏற்படும் அபாயம் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நாய்களுடன் பழகுங்கள்: மனச்சிதைவு நோய் வராது!

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான குழந்தைகள் செல்லப்பிராணிகளுடன்தான் பொழுதைக் கழிக்கின்றனர். அவ்வாறு செல்லப்பிராணிகளை வைத்திருப்பது குழந்தையின் உடல்நலத்திற்கு நல்லது என ஆராய்ச்சி ஒன்றில் தெரிய வந்துள்ளது. அதாவது நாய்களுடன் பழகிய குழந்தைகளுக்கு  பிற்காலத்தில் (schizophrenia)ஸ்கிசோஃப்ரினியா-மனச்சிதைவு நோய் ஏற்படும் அபாயம் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்கிசோஃப்ரினியா என்பது ஒரு நாள்பட்ட, மோசமான மனச்சிதைவு நோய் ஆகும். இதனை பைபோலார் டிஸார்டர் (Bipolar Disorder) என்றும் கூறுவார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பானவர்களாக இருக்க மாட்டார்கள். மாறாக, மனப்பிரமைகள், மனத்தளர்ச்சி, கற்பனையான உலகம் என இருப்பர். 

இந்நிலையில், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஆராய்ச்சி நிறுவனமானது, செல்லப்பிராணி வைத்திருப்பது ஏராளமான நேர்மறைகளைக் கொண்டுள்ளது என்று சமீபத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது. சிறுவயதிலிருந்தே நாய்களுடன் இருக்கும் குழந்தைகளுக்கு  பிற்காலத்தில் ஸ்கிசோஃப்ரினியா ஏற்படுவதற்கான அபாயம் குறைவாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. 

ஜான் ஹாப்கின்ஸ் குழந்தைகள் மையத்தின் தலைமை இயக்குனரும், ஆராய்ச்சியின் முதன்மை ஆசிரியருமான ராபர்ட் யோல்கன் இந்த ஆய்வு குறித்து கூறுகையில், 'மனிதனின் ஆரம்ப கால வாழ்க்கையில், வீட்டுச் செல்லப்பிராணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், குழந்தைகளுடன் பெரும்பாலான நேரங்களில் அவை உடன் இருக்கின்றன. எனவே, இருவருக்கும் இடையிலான தொடர்பு குறித்து ஆராய முடிவு செய்தோம்.

அதன்படி ஒரு நபரின் பிறப்பிலிருந்து முதல் 12 ஆண்டுகள், நாய்கள் மற்றும் பூனைகளுடன் பழகும் பட்சத்தில் பிற்காலத்தில் அவர்களுக்கு பைபோலார் அல்லது ஸ்கிசோஃப்ரினியா தாக்கம் குறைவாக இருக்கும். அதே நேரத்தில் குழந்தைகளுக்கும், நாய்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து புள்ளிவிவர அறிக்கைகள் எதுவும் இல்லை. அதேபோன்று, பூனைகளுடன் இருக்கும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் நோயின் தாக்கம் குறைவாக இருக்குமா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு செய்யப்படவில்லை.அதற்கான ஆய்வு தொடருகிறது' என்று கூறினார். 

மேலும், ஒரு பூனை அல்லது நாயின் ஒவ்வாமை, நுண்ணுயிர் வெளிப்பாடு உள்ளிட்டவைகளை வைத்து மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலம் மற்றும் நரம்பியல் மண்டலங்களில் மாற்றம் ஏற்படுகிறது என்றும் கூறினார். 

அமெரிக்காவின்  பால்டிமோர் நகரிலிருந்து 18 முதல் 65 வயதுக்குட்பட்ட 1371 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர், அவர்களில் 396 பேர் ஸ்கிசோஃப்ரினியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 381 பேர் பைபோலார் மற்றும் 594  பேர் சிறிதளவில் மனநலம் பாதிக்கப்பட்டனர். 

பின்னர், ஆய்வில் பங்கேற்றவர்களிடம் 12 வயதிற்கு முன்னர் பூனைகள் அல்லது நாய்களுடன் நேரம் செலவழித்தது குறித்து கேட்கப்பட்டது. அதில், நாய்கள் மற்றும் பூனைகளுடன் இருந்தவர்களுக்கு பிற்காலத்தில் மிகவும் தாமதாக, வயதான காலத்திலே மனநல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு ஸ்கிசோஃப்ரினியா ஆபத்து 24 சதவீதம் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com