சுடச்சுட

  
  kadhir20


  'என் வீட்டுக்காரருக்கு ஞாபக மறதி அதிகமாயிடுச்சு. வீட்டைப் பூட்டிட்டு போய் திரும்பவும் வந்து ஒன்னுக்கு ரெண்டு தடவை பார்த்துட்டு வருவாரு டாக்டர்'
  'அது நல்லதுதானம்மா...'
  'நான் சொன்னது பக்கத்து வீட்டோட பூட்டை'

  **

  'புது வருஷத்தில இருந்து பைசா கடன் வாங்க மாட்டேன்டா'
  'அப்படியா?'
  'ஆமா... ரூபாய் நோட்டாத்தான் வாங்குவேன்'

  **
  'தலைவா லஞ்ச ஊழல்துறைக்கு ஓராளை நியமிக்கப் போறீங்களாமே... யாரை நியமிக்கப் போறீங்க?'
  அதிகமா யார் தர்றாங்களோ... அவங்களைத்தான்'

  தீ.அசோகன், சென்னை-19.


  'என்ன இந்த டீக்கடையிலே  டீ  தர்றப்ப ஒண்ணு, ரெண்டு, மூணுன்னு சொல்லி  
  டீ  தர்றாங்க... ஏன்?'
  'நான்தான் சொன்னேன் இல்ல. இங்க ஏலம் போட்ட டீ  கிடைக்கும்ன்னு'

  **
  'அந்த டாக்டர் ஈயைப் பார்த்ததே இல்லை போலிருக்கு...'
  எப்படிச் சொல்றே?'
  'பல்லு வலின்னு போனா "ஈ' காட்டுன்னு சொல்றாரே?'

  எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.

  'உண்மையைச் சொல்லணும்னா விளம்பரம்தான் எனக்குச் சோறு போடுது'
  'நீங்க விளம்பர ஏஜெண்டா இருக்கீங்களா?'
  'அதெல்லாமில்லை... டி.வி.யில விளம்பரம் போட்டால்தான் என் மனைவி எனக்கு சோறு போடவே வருவாள்ன்னு சொன்னேன்'

  வி.ரேவதி, தஞ்சை.


  'கிரிக்கெட் பிளேயர்ஸ் எல்லாம் எப்படி பேசுவாங்க தெரியுமா?'
  எப்படி?'
  'ஓவரா பேசுவாங்க'

  ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

  'ஏன்டா மாப்பிள்ளே... யாராவது முக்கியமான ஆள் இறந்துட்டா வானத்தை நோக்கிசுடுறாங்களே அது எதுக்காக?'
  'இறந்தவங்க ஆவியாக் கூட  தப்பிச்சிடக் கூடாதுன்னுதான்.'

  எஸ்.கார்த்திக் ஆனந்த், திண்டுக்கல்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai