வெள்ளைச் சட்டையில் சின்ன கறை கூட படியாமல் பார்த்துக் கொள்வது எப்படி?

யார் வேண்டுமானாலும் வெள்ளைச்  சட்டை அணியலாம். ஆனால் சின்ன கறை கூட படியாமல் பார்த்துக் கொள்வது ரொம்ப முக்கியம்.
வெள்ளைச் சட்டையில் சின்ன கறை கூட படியாமல் பார்த்துக் கொள்வது எப்படி?

யார் வேண்டுமானாலும் வெள்ளைச்  சட்டை அணியலாம். ஆனால் சின்ன கறை கூட படியாமல் பார்த்துக் கொள்வது ரொம்ப முக்கியம்.  கசங்கிப் போன சட்டையை அயர்ன் பண்ணி போட்டுக் கொள்ள வேண்டும். அடிக்கிற கடுமையான வெயிலில் வியர்வை படிந்து சட்டை 'மணக்க'த் தொடங்கிவிடும்.  வெள்ளைச் சட்டை அணிவதில் உள்ள பிரச்னைகளை நீங்கள் சமாளித்தால்தான் 'வெள்ளையும் சொள்ளையுமாக' வெளியுலகில் காட்சி தர முடியும்.

சட்டையில் கறை படிவதைப் பற்றி, வியர்வை நாற்றம் பற்றி, அயர்ன் பண்ணுவதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சட்டையை வாங்கினோமா... போட்டுக் கொண்டு திரிந்தோமா என்று  இருக்க ஒரு புதுவிதமான சட்டை வந்திருக்கிறது. 

FOOXMET என்ற பெயருடைய இந்தச் சட்டை 72 சதம் பருத்தி 28 சதம் சரோனா ஃ பேப்ரிக்கால் செய்யப்பட்டது. வியர்வையால் நனைந்தாலோ, கறை படிந்தாலோ எளிதில் இதைத் தூய்மையாக்கிவிடலாம்.  இன்னும் சொல்லப் போனால் இந்தச் சட்டையில் கறை படியவே படியாது.  

இந்தச் சட்டை கசங்காது. அதனால் அயர்ன் பண்ண வேண்டும் என்ற அவசியமுமில்லை. இதற்காக இந்தச் சட்டையில் ஃபுளோரோ - ஆர்கானிக் வேதிப் பொருள்களைப் பூசியிருக்கிறார்கள். 

சட்டையில் காபியோ, டீயோ கொட்டிவிட்டது என்றால், அது கறையாக மாறாமல் இருக்க ஒரு கைக்குட்டையில் கறை நீக்கும் திரவத்தை நனைத்து, காபி, டீ கொட்டிவிட்ட இடத்தில் துடைத்தால் போதும்.  

- என்.ஜே., சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com