உப்புமா சுவையாகவும் சத்துடன் இருக்க இந்த டிப்ஸ் உதவும்

எந்த வகை உப்புமா செய்தாலும் அத்துடன் அரைக்கீரையைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும். உப்புமா சுவையும், சத்தும் கூடும். 
உப்புமா சுவையாகவும் சத்துடன் இருக்க இந்த டிப்ஸ் உதவும்
  • இட்லிக்கு மாவு அரைக்கும்போது, உளுந்துடன் இரண்டு வெண்டைக் காய்களை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொண்டு அரைத்தால் இட்லி மல்லிகைப் பூ போன்று வெண்மையாகவும், மென்மையாகவும் இருக்கும்.
  • எந்த வகை உப்புமா செய்தாலும் அத்துடன் அரைக்கீரையைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும். உப்புமா சுவையும், சத்தும் கூடும். 
  • உளுந்து வடைக்கு மாவு அரைக்கும் போது, அதில் 3 தேக்கரண்டி கார்ன்ஃபிளார் மாவு சேர்த்து கலந்து, வடை தட்டினால் வடையின் ருசி சூப்பராக இருக்கும். இந்த வடையுடன் தேங்காய்ச் சட்னி வைத்து சாப்பிட்டால் மிக சூப்பராக இருக்கும்.
  • எந்த பாயசம் செய்தாலும், மூன்று மஞ்சள் வாழைப் பழங்களை பிசைந்து சேர்த்துக் கொண்டால், பாயசம் மிகவும் ருசியாக இருக்கும். எளிதில் ஜீரணமும் ஆகும். 
  • வெஜிடபிள் ரைஸ் செய்யும் போது 25 கிராம் பன்னீரை நடுத்தர அளவு துண்டுகளாக சேர்த்துக் கொள்ளவும், வெஜிடபிள் ரைஸ் மிகவும் சுவையாக இருக்கும். வெஜிடபிள் ரைஸ் விரும்பாத குழந்தைகள் கூட விரும்பிச் சாப்பிடும். 

(பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் நூலிலிருந்து உ.ராமநாதன், நாகர்கோவில்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com