வீக் என்ட் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரிங்க!

மருமகளே நான் உன்னைத் திட்டுற திட்டுக்கள் எல்லாம் உனக்கு மனவருத்தம் தரலேன்னா
வீக் என்ட் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரிங்க!

தண்ணீர் லாரிக்கு முன்னும் பின்னும் ஏன் போலீஸ் பாதுகாப்பு போகிறது? 
தண்ணீர் லாரியை யாரோ கடத்தப் போறதா போலீசுக்குத் தகவல் வந்திருக்கு

- ஆர்.மகாதேவன், திருநெல்வேலி .

என்னைக் கல்யாணம் பண்ணினதும் என் புருஷனுக்கு இருந்த தோஷம்
போயிடுச்சு'
என்ன தோஷம்?
சந்தோஷம்

- எஸ்.சடையப்பன், காளனம்பட்டி. 

**

நான் எது சொன்னாலும் என் மனைவி உடனே ஓ.கே.சொல்லிடுவா அப்படியா கேட்கவே சந்தோஷமா இருக்கே....'

சமையல் ரெடி... உடனே சாப்பிடலாம்ன்னு நான் சொன்னா... உடனே ஓ.கே.சொல்லிடுவா''

- விஜயா சுவாமிநாதன், திருச்சி -3

ஏம்ப்பா ஏட்டு இவன் என்ன கேஸ்ல மாட்டிக்கிட்டான்?

தண்ணிப் பார்ட்டியாம்
என்ன புதுசா இருக்கு?'
எங்க தண்ணி கேன் இருந்தாலும் திருடிட்டுப் போயிடுவானாம்

- ஆர்.எம்., திருநெல்வேலி 

முதலாளிக்கு இன்னும் பணத்தாசை போகலை எப்படிச் சொல்றே?
அங்கே எல்லாரும் சாமியைச் சுற்றி வர்றாங்க. இவர் மட்டும்  உண்டியலைச் சுற்றி வர்றாரே?

**

மருமகளே நான் உன்னைத் திட்டுற திட்டுக்கள் எல்லாம் உனக்கு மனவருத்தம் தரலேன்னா... என்னிடம் சொல்லு
எதுக்கு அத்தே?
நீ வருத்தப்படும்படியா மாற்றி திட்டணுமே.... அதுக்குத்தான்

- கே.அருணாசலம், தென்காசி

மாப்பிள்ளை தங்கமானவர். ரொக்கமா  ரெண்டு லட்சம் தர்றேன்னு சொன்னேன். 
வேண்டாம்னுட்டார். 20 பவுன் போடுறேன்னு சொன்னேன். வேண்டாம்னுட்டார்
ரொம்ப தங்கமானவரா தெரியுறாரே.... அப்புறம்?
என் பொண்ணையும் வேண்டாம்னுட்டாரே

- எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி. 

கூட்டத்திலே பேசிக் கொண்டிருந்த தலைவர் செருப்பு வந்து விழுந்ததும்  ஏன் ஒரே குழப்பமாயிட்டார்?
கூட்டத்திலே பார்வையாளர் ஒருவர் மட்டும்தான் இருந்தாராம். ஆனால் ரெண்டு ஜோடி செருப்புகள் மேடையிலே வந்து விழுந்து இருக்கு. அது எப்படின்னு குழப்பமாயிட்டார்

- ஆர்.ஹரிகோபி, புதுடெல்லி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com