வெண்டைக்காய் ருசியாக மொறு மொறுப்புடன் இருக்க இதை ட்ரை பண்ணுங்க!

வெண்டைக்காயை வதக்கும் போது சிறிது எலுமிச்சைச்சாறு விட்டு வதக்கினால் மொறு மொறுப்புடன் இருக்கும்.
வெண்டைக்காய் ருசியாக மொறு மொறுப்புடன் இருக்க இதை ட்ரை பண்ணுங்க!
  • எலுமிச்சை சில துளி தேவைப்படும்போது முழுப் பழத்தையும் அரிந்து வீணாக்காமல் சிறிய துளையிட்டுத் தேவையான அளவு சாறுபிழிந்து கொள்ளலாம்.
  • காபி மேக்கரைத் கழுவும் போது நீருடன் எலுமிச்சைச்சாறு அல்லது வினிகரை விட்டு பின்பு ஸ்விட்சை ஆன் செய்யுங்கள் போதும். படுசுத்தமாகிவிடும்.
  • கண்ணாடிப் பாத்திரங்களின் அடியில் கறைகள் இருந்தால் சில சொட்டு எலுமிச்சம் பழச்சாறு, சிறிதளவு தண்ணீர் கலந்து குலுக்கினால் கறைகள் நீங்கிவிடும்.
  • தோசைக் கல், வாணலி இவைகளில் எண்ணெய் பிசுபிசுவென்று பிடித்திருக்கும். சூட்டுடன் இருக்கும் போதே சிறிது எலுமிச்சைச்சாறு விட்டு தேங்காய் நாரினால் அழுத்தித் தேய்த்துக் கழுவினால் பிசுபிசுப்பு சட்டெனப் போய்விடும்.

- ஆர்.ராமலட்சுமி, திருநெல்வேலி. 

  • தோலால் செய்யப்பட்ட சூட்கேஸை உபயோகிக்காமல் வைத்திருந்தால் அதனுள்ளே பூச்சி வரும். உபயோகமில்லாத சூட்கேஸில் ஒரு சோப்புத் துண்டை போட்டு வைக்கவும். பூச்சி வராது. நாற்றமும் வராது.
  • ரப்பர் பேண்ட் வைத்திருக்கும் டப்பாவில் சிறிது டால்கம் பவுடரைத் தூவி வைத்தால் அவை ஒன்றொடொன்று ஒட்டிக் கொள்ளாது.
  • மிளகாய்த் தூள், கோதுமை மாவு போன்றவை மிஷினில் அரைத்தவுடன் சூடாக இருக்கும். இதனால் வீட்டிற்கு வந்ததும் காகிதத்தில் கொட்டிப் பரப்பி ஆறச் செய்து, பிறகு, டப்பாவில் நிரப்பி வைக்க வேண்டும்.
  • சமையல் செய்யும் போது மேலே எண்ணெய் தெறித்து சுட்டுவிட்டால், அந்த இடத்தில் உருளைக் கிழங்கை அரைத்துப் பூசினால் எரியாது, கொப்பளிக்காது.
  • புது துடைப்பம் வாங்கியதும், அதை உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்து விட்டுப் பின் உலர வைத்துப் பயன்படுத்தினால் நீண்ட நாள் பயன்படுத்தலாம். 

- அமுதா சரவணன், அம்பத்தூர்.

  • வாழை இலையைப் பின்பக்கம் தணலில் சிறிது காட்டி, பிறகு பார்சலில் கட்டினால் கிழியாது.
  • கீரையை மசிக்கும் போது அதனுடன் உருளைக் கிழங்கு ஒன்றை தோல் சீவி, சிறு துண்டுகளாக வேக விட்டு மசித்தால் ருசியாக இருக்கும்.
  • ரவா லட்டு பிடிக்கும்போது சிறிது ரோஸ் எஸன்ஸ் விட்டுச் செய்தால் மணமும் சுவையும் கூடும்.
  • தோசை சூடும்போது கல்லில் மாவை ஊற்றி விட்டு, மேல் பகுதியில் தேங்காயைத் துருவி தூவினால் தோசை சூப்பராக இருக்கும்.
  • பிரட்டில் தடவ ஜாம் இல்லாவிட்டால், நெய் தடவி, அதன் மீது கொஞ்சம் தேனைத் தடவினால் சூப்பராக இருக்கும்.
  • கொஞ்சம் அரிசி, கொஞ்சம் உளுந்தை மெஷினில் கொடுத்து மாவாக அரைத்து வைத்துக் கொண்டால், திடீர் என்று விருந்தினர் வந்து விட்டால் அதைக் கரைத்து திடீர் தோசை சுட்டு அசத்தலாம்.
  • பழைய சாதத்தை வெள்ளைத் துணியில் கட்டி, இட்லி தட்டில் வைத்து சூடு படுத்தினால் சாதம் உதிர் உதிராக புதிதாக வடித்த சாதம் போல் இருக்கும்.
  • வெண்டைக்காயை வதக்கும் போது சிறிது எலுமிச்சைச்சாறு விட்டு வதக்கினால் மொறு மொறுப்புடன் இருக்கும்.

- எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com