தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் தி கிராண்ட் 3.0 பிரம்மாண்ட 3 இன் 1 கண்காட்சி!

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமமும் பரோடா வங்கியும் இணைந்து தி கிராண்ட் 3.0 என்ற பெயரில் பிரம்மாண்ட 3 இன் 1 கண்காட்சியை சென்னையில் நடத்துகின்றன.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் தி கிராண்ட் 3.0 பிரம்மாண்ட 3 இன் 1 கண்காட்சி!

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமமும் பரோடா வங்கியும் இணைந்து தி கிராண்ட் 3.0 என்ற பெயரில் பிரம்மாண்ட 3 இன் 1 கண்காட்சியை சென்னையில் நடத்துகின்றன.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் விங்ஸ் கன்வென்ஷன் சென்டரில், மார்ச் 22, 23, 24 ஆகிய தேதிகளில் இந்தக் கண்காட்சி நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சி நடைபெறும்.

உங்கள் இல்லத்துக்கான முழுமையான கண்காட்சியாக நடைபெற உள்ள இதில், அசோக் நந்தவனத்துடன் இணைந்த பிராப்பர்டி எக்ஸோ பிரிவில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வீட்டு மனை, ஃப்ளாட்டுகள், வில்லாக்கள், தனி வீடுகளை மிகக் குறைந்த விலையில் வாங்கிட குறைந்த வட்டியில் எளிதான இஎம்ஐ வசதிகளுடன் முன்னணி வங்கிகளின் நிதி உதவி வசதிகளும் கிடைக்கும்.

தவிர, ஹெல்த் எக்ஸ்போ என்ற பிரிவில், இலவச மருத்துவ ஆலோசனைகள், வர்ம சிகிச்சை, சித்தா, ஆயுர்வேதா, இலவச ஹெபடைட்டிஸ் பரிசோதனை, இலவச கண் மற்றும் காது பரிசோதனை, முன்னணி நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் இலவச ஆட்டிசம் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

வசந்த் அண்ட் கோ நிறுவனத்துடன் இணைந்த ஹோம் ப்ராடக்ட்ஸ் எக்ஸோ என்ற பிரிவில் வீட்டு உபயோகப் பொருள்கள், முன்னணி பிராண்ட் கார்கள், பைக்குகள் ஆகியவை சிறப்புத் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

மொத்தம் 200-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் கிட்ஸ் ஸோன் என்ற குழந்தைகளுக்கான சிறப்புப் பகுதியும் இடம்பெறுகின்றன.

இக் கண்காட்சிக்கு அனுமதி இலவசம். கண்காட்சி குறித்த மேலதிக விவரங்களுக்கு 99624 10906 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com