அசத்தும் ருசியுடன் அடை செய்ய இதைப் பின்பற்றுங்கள்!

கொஞ்சம் வசம்பை ரவா, மைதா உள்ள டப்பாவில் தட்டிப் போட்டு வைத்தால் பூச்சி, புழுக்கள் வராது.
அசத்தும் ருசியுடன் அடை செய்ய இதைப் பின்பற்றுங்கள்!
  • கொஞ்சம் வசம்பை ரவா, மைதா உள்ள டப்பாவில் தட்டிப் போட்டு வைத்தால் பூச்சி, புழுக்கள் வராது.
  • இஞ்சியின் தோலைச் சீவி விட்டு, அலசி சுத்தம் செய்துவிட்டு தயிரில் போட்டால் தயிர் நீண்ட நேரம் புளிக்கவே புளிக்காது.
  • காய்ந்த மிளகாயை வறுக்கும்போது சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
  • பச்சை மிளகாயை காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் பசுமையாக இருக்கும்.
  • தோசை சுடும் போது தோசைக் கல்லில் மாவு ஒட்டிக் கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.
  • தேங்காயை உடைத்தவுடன் கழுவிவிட்டு பின் பிரிட்ஜில் வைத்தால் அதில் பிசுபிசுப்பு ஏற்படாது.
  • சர்க்கரையில் 5 கிராம்புகள் போட்டு வைத்தால் எறும்பு வராது... நீர்த்தும் போகாது.
  • கட்லெட் செய்வதற்கு பிரெட் தூள் இல்லையா? பிரெட் ஸ்லைஸ் தவாவில் புரட்டி எடுத்து, மிக்ஸியில் உதிர்த்து உபயோகிக்கலாம்.
  • ரசப்பொடி இல்லாத போது ரசம் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மிளகு சீரகத்துடன் ஒரு கரண்டி துவரம் பருப்பையும் வைத்து அரைத்துப் போட்டால் ரசம் சுவையாக இருக்கும்.
  • அடைக்கு ஊற வைக்கும் அரிசி, பருப்புடன் சிறிது கொண்டைக் கடலையையும் ஊற வைத்து, அரைத்து அடை செய்தால் ருசியாக இருக்கும்.

 - சரோஜா சண்முகம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com