காதலர்களிடம் இதைக் கேளுங்கள்!

சகோதரியின் முக்கியத்துவம் தெரிய வேண்டுமென்றால், ஒற்றைப் பிள்ளையிடம் கேளுங்கள்
couple
couple
  • சகோதரியின் முக்கியத்துவம் தெரிய வேண்டுமென்றால், ஒற்றைப் பிள்ளையிடம் கேளுங்கள்
  • பத்து வருடங்களின் மதிப்பை சமீபத்தில் விவாகரத்து செய்த தம்பதிகளைக் கேளுங்கள்
  • நான்கு வருடங்களின் மதிப்பை ஒரு பட்டதாரியிடம் கேளுங்கள்
  • ஒரு வருடத்தின் மதிப்பை இறுதித் தேர்வில் தோல்வி அடைந்த மாணவனிடம் கேளுங்கள்
  • ஒன்பது மாதங்களின் மதிப்பை அப்போதுதான் குழந்தை பெற்ற இளம் தாயிடம் கேளுங்கள்
  • ஒரு மாதத்தின் மதிப்பை குறிப்பிட்டக் காலத்திற்கு முன்னதாகவே குழந்தை பெற்ற ஒரு தாயிடம் கேளுங்கள்
  • ஒரு வாரத்தின் மதிப்பை ஒரு வாரப் பத்திரிகையயின் ஆசிரியரிடம் கேளுங்கள்
  • ஒரு மணி நேரத்தின் மதிப்பை சந்திக்கக் காத்திருக்கும் காதலர்களிடம் கேளுங்கள்.
  • ஒரு நிமிடத்தின் மதிப்பை பேருந்தையோ, விமானத்தையோ, ரயிலையோ தவறவிட்ட பயணியிடம் கேளுங்கள்
  • ஒரு வினாடியின் மதிப்பை விபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய நபரிடம் கேளுங்கள்
  • ஆயிரத்தில் ஒரு வினாடியின் மதிப்பை ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரரிடம் கேளுங்கள்
  • ஒரு நண்பனின் மதிப்பு அவனை இழக்கும் போதுதான் தெரியும்.

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. ஒவ்வொரு மணித்துளியும் விலைமதிப்பற்றது. விலைமதிப்பற்ற நேரத்தை நமக்கு மிகவும் வேண்டியவர்களுடன் பகிர்ந்து  கொள்ள வேண்டும். பயனுள்ள விதத்தில் உபயோகப்படுத்த வேண்டும்.

(படித்ததில் பிடித்தது)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com