வீக் எண்ட் ஜோக்ஸ்! சிரிப்பு கியாரண்டி!

மன்னர் ஏன் மார்கழியில் போரை வைத்துக் கொள்ளலாம் என்கிறார்?
வீக் எண்ட் ஜோக்ஸ்! சிரிப்பு கியாரண்டி!

'மன்னர் ஏன் மார்கழியில் போரை வைத்துக் கொள்ளலாம் என்கிறார்?'

'அப்போதுதான் எதிரிகள் மன்னரைப் பார்த்து நடுங்குவார்களாம்.
- உ.சபாநாயகம், சிதம்பரம்.

**

'எங்களுக்கு பெண்ணை ரொம்பப் பிடிச்சிருக்கு. கல்யாணத்துக்கு பொண்ணுக்கு என்ன போடுவீங்க?'

'கை, காலுக்கு மருதாணி, நகத்துக்கு நகபாலீஷ், தலைமுடிக்கு ஹேர் கலர் ஷாம்பு, உதட்டுக்கு லிப்ஸ்டிக் இவ்வளவும் போடுவோம்'
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

'அந்த பெரியவர் சரியான சாப்பாட்டு பிரியர்னு எதை வச்சு சொல்றீங்க?'

'பல் போனால் பக்கோடா போகும்னு புதுமொழி சொல்லிட்டுப் போறாரே'
- கே.முத்தூஸ், தொண்டி.

பக்கத்து வீட்டுக்காரர்: நாளையிலிருந்து உனக்கும், உன் வீட்டம்மாவுக்கும்  சண்டை வரப்போகுது?

இவர்: ஏன் அப்படி சொல்றீங்க?

பக்கத்து வீட்டுக்காரர்: என் மனைவிக்கு புதுசா ஒரு வைர நெக்லஸ் வாங்கிக் கொடுத்திருக்கேனே
- கே.ஈ.கே, விழுப்புரம்.

அப்பா ... இன்னிக்குதான் எங்க சார் உங்கள பாராட்டினாங்க'
எதுக்குடா...?'
ஹோம் ஒர்க் சரியா இருந்துச்சாம்'
- ம.வேதவள்ளி, பொரவச்சேரி.

அப்பா : எதுக்கு சார் என் பையனை அடிச்சீங்க?
ஆசிரியர்: ஏன்டா ஹோம் ஒர்க் பண்ணலன்னு கேட்டா,
நான் ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிறேன் சார்ன்னு சொல்றான் சார்
- கே.இந்துகுமரப்பன், விழுப்புரம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com