கும்பக்கரை அருவியில் தொடர்ந்து 20 வது நாளாக குளிக்கத் தடை!

தேனி மாவட்டம், பெரியகுளத்திற்கு அருகில் இருக்கும் கும்பக்கரை அருவி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தென் தமிழக சுற்றுலாத் தலங்களில் ஒன்று.
கும்பக்கரை அருவியில் தொடர்ந்து 20 வது நாளாக குளிக்கத் தடை!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை காரணமாக கும்பக்கரை அருவியில் தொடர்ந்து 20 வது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளத்திற்கு அருகில் இருக்கும் கும்பக்கரை அருவி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தென் தமிழக சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இந்தப் பகுதியில் மா, முந்திரி, கொய்யா, தென்னந்தோப்புகள் மிக அதிகம் காணப்படுகின்றன. அருவிக்குச் செல்லும் வழி நெடுக இந்த தோப்புகள் அடுத்தடுத்து நெருக்கமாக அமைந்திருப்பதால் கடும் கோடையில் கூட அருவிக்குச் செல்லும் பாதை குளுமை போர்த்தி இருப்பது இதன் சிறப்புகளில் ஒன்று.

இந்த அருவியில் மிக வறண்ட கோடையிலும் கூட சுற்றுலாப் பயணிகள் தங்களை நனைத்து அருவியின் குளுமையை அனுபவிக்கத் தடை இருந்ததில்லை. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருப்பதால் அங்கு கேரள மலைப்பகுதிகளில் பெய்யும் மழை கும்பக்கரை அருவியை வற்றி வறழாமல் பாதுகாத்து வருவது வழக்கம். அதே சமயத்தில் இப்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனத்த மழைப்பொழிவு ஏற்பட்டால் கும்பக்கரை அருவியில் நீரின் வேகம் கட்டுக்கடங்காமல் சென்று அங்கு குளிக்க வரும் பயணிகளின் உயிரைக் காவு வாங்குவதும் கூட அரிதாக நிகழ்வதுண்டு. இப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மலையேற்றப் பயிற்சிகளில் ஈடுபடுவதும் கூட வழக்கமான ஒன்று என்பதால் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அச்சமயங்களில் அரசு சுற்றுலாத்துறையும் வனத்துறையும் இணைந்து அருவியில் குளிக்க மட்டுமல்ல அந்தப் பகுதியை அணுகவும் கூட தடை விடுத்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் விடுப்பதுண்டு. அப்படியான எச்சரிக்கைகளில் ஒன்றாக மேற்கண்ட அறிவிப்பின்படி தற்போது தொடர்ந்து 20 வது நாளாக கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com