Enable Javscript for better performance
விஞ்ஞானி லலிதாம்பிகா- Dinamani

சுடச்சுட

  
  IMG-20191017-WA0003

   

  இந்திய அரசின், முதன்மை தேசிய விண்வெளி ஆய்வு முகமையான, இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ [ISRO ] , பங்களூருவில் 1969-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.இது, உலகின் மாபெரும் விண்வெளி ஆய்வு மையங்களில்  ஆறாவதாகும் . 

  நிலவை நோக்கி முதல் பயணமாக சந்திரயான் 1 ஏவப்பட்டதை அறிவோம். இந்தியாவின் இரண்டாவது விண்கலம் , சந்திரயான் 2 ஏவப்பட்டதை ஒட்டி, அனைத்து நாடுகளின் பார்வையும் , இந்தியாவின் பக்கம் திரும்பியதை அறிவோம். அதன் மூலம், தற்சமயம் இஸ்ரோவின் தலைவராக இருக்கும், டாக்டர் K . சிவன் அவர்களைப்  பற்றி நிறைய அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்ததில் மகிழ்ச்சியே.

  அதே சமயம், இஸ்ரோவில், நெருக்கமான பல திட்டங்களைக் கையாண்டு,சிக்கல்களை சமாளித்து, தடைகளைத் தாண்டி, முன்னேற்றப் பாதையில் பயணிக்க , முக்கிய பொறுப்பில் பெண்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் மறுக்கவோ, மறக்கவோ முடியாது என்பதுதான் உண்மை.

  2020ஆம் ஆண்டு, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் "ககன்யான்" திட்டத்திற்கான தலைவராக, டாக்டர் V.R.லலிதாம்பிகா பொறுப்பேற்றிருக்கிறார். இவர், ஒரு பொறியாளர் மற்றும் விஞ்ஞானி. இவர் , " அட்வான்ஸ்ட்  லான்சர் டெக்னாலஜி " யில் வல்லுநர்.

  லலிதாம்பிகா , 1962ஆம் ஆண்டு, கேரளாவில், திருவனந்தபுரத்தில் பிறந்தார். திருவனந்தபுரத்திலேயே, B .Tech எலக்ட்ரிக்கல் என்ஜினீரிங்கும், M .Tech கண்ட்ரோல் என்ஜினீரிங்கும் பயின்றார்.. இஸ்ரோவிற்காக வேலை செய்யும் பொழுது,  " அட்வான்ஸ்ட் லான்ச் வெஹிகிள் " என்பதில் முனைவர் [ Ph .D ]  பட்டம் பெற்றார். 

  1988இல்,  " விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டரில் பணியில் சேர்ந்தார். துணை இயக்குந ராகவும் பணியாற்றிய லலிதாம்பிகா, இஸ்ரோவில் பணியாற்றத் துவங்கிய பின், " முனைய துணைக்கோள் ஏவு கலம் [ PSLV ], புவிநிலை சுற்றுப்பாதையில் ஏவத்தக்க ஏவுகலம் [ GSLV ], ASLV  , RLV போன்ற நூறு விண்கலன்களை செலுத்தியதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

  2001 இல் ஸ்பேஸ் கோல்ட் மெடல், 2. 2013-இல் ISRO இண்டிவிஜுவல் மெரிட் விருது மற்றும் ISRO  பர்ஃபாமன்ஸ் எக்சலெண்ட் விருது, 'எக்சலெண்ட் லான்ச் வெஹிகிள் டெக்னாலஜ. இதற்காக அஸ்ட்ரநாட்டிக்கல் சொசைட்டி ஆப் இந்தியா "  விருது ஆகியற்றைப் பெற்றிருக்கிறார் .

  இரண்டு குழந்தைச் செல்வங்களுக்கு தாயாக இருக்கும் இவரின் கணவரும் பொறியாளர்தான். லலிதாம்பிகாவிற்கு இந்தத் துறையில் நாட்டம் ஏற்பட்டது எப்படி என்று கேட்டால், அவர் என்ன கூறுகிறார் தெரியுமா? "தும்பா ராக்கெட் டெஸ்டிங் சென்டர் அருகிலேயே எங்கள்  வீடு இருந்தது.அப்பொழுதிலிருந்தே இஸ்ரோ மீது எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்து வந்தது. என் தந்தை, பொறியாளராக இருந்தார். என் தாத்தா, கணித சாஸ்திரம் அறிந்த ஒரு விண்வெளி வீரர்.இஸ்ரோவைப் பற்றிய தகவல்களை அவ்வப்பொழுது எனக்கு கூறி வந்தார். அதனால் எனக்கு இஸ்ரோவின் மீது பிடிமானம் அதிகமாகியது.நான் இத்துறையைத் தேர்ந்தெடுக்க அவர்தான் காரணம் என்று கூறினால் மிகையில்லை " என்கிறார்.

  பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில், தயாராகிக் கொண்டிருக்கும், "ககன் "  திட்டத்திற்கு தலைமைப் பொறுப்பினை ஏற்று செயலாற்றிக் கொண்டிருக்கும் லலிதாம்பிகாவின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்தினைப் பாப்போம்.

  ஒரு ராக்கெட்டிற்குள் நூற்று நான்கு செயற்கைக் கோள்களை ஏவிய திட்டத்திற்கு தலைமை வகித்தபொழுது, ஒரு செயற்கைக் கோளும் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொள்ளவில்லை என்பதிலிருந்தே அவரின் செயலாற்றும் திறமையை அறிந்து கொள்ள முடிகிறது.

  அவருக்கு இவ்வளவு பெரிய பொறுப்பு கொடுக்கப் பட்டது எப்படி என்றால், "எக்சலெண்ட் லான்ச் வெஹிகிள் டெக்னாலஜி "க்கு லலிதாம்பிகாவிற்கு விருது கிடைத்ததால், அவரிடம் இந்த பெரும் பணி  ஒப்படைக்கப் பட்டிருக்கிறது" என்று கூறி மேலும் அவருக்கு பெருமை சேர்க்கிறார், ISRO தலைவர் , டாக்டர் . K . சிவன்.

  தேசிய விண்வெளி ஆய்வு மையத்தில், ஒரு பெண் விஞ்ஞானிக்கு, முக்கிய பொறுப்பு அதாவது இந்தியா நாட்டிற்கு மேலும் பெருமை சேர்க்கும்படியான பெரும் பொறுப்பும், அந்தஸ்த்தும் கொடுக்கப் பட்டிருப்பது பெண் இனத்திற்கே பெருமை அல்லவா? அவரின் முயற்சி வெற்றி பெற எல்லோரும் வாழ்த்துவோம்.

  - மாலதி சந்திரசேகரன்

  TAGS
  ISRO
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai