சத்தான இட்லி வேண்டுமா? இதை முயற்சித்துப் பாருங்கள்!

சமைப்பதற்கு அரை மணி நேரம் முன்பு அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஊற வைத்து, பின்னர் வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.
சத்தான இட்லி வேண்டுமா? இதை முயற்சித்துப் பாருங்கள்!
  • சமைப்பதற்கு அரை மணி நேரம் முன்பு அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஊற வைத்து, பின்னர் வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.
  • ஊறுகாய் செய்யும் போது உப்பை லேசாக வறுத்து போட்டால் ஊறுகாயின் மேல் வெண்மை நிறம் படியாது.
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைத்து வைத்துக் கொள்ள, இஞ்சியை விட பூண்டை சிறிது அதிகமாக சேர்த்து செய்தால் நல்ல சுவையாக இருக்கும்.
  • சேப்பங்கிழங்கை வேக வைத்து பிரிஜ்ஜில் அரை மணி நேரம் வைத்து தோலுரித்து வெட்டினால் வழுவழுப்பு இருக்காது. 
  • இட்லிக்கு மாவு அரைக்கும் போது, உளுந்துக்கு பதிலாக சோயா மொச்சையை பயன்படுத்தி அரைத்து இட்லி செய்தால் அதிக சத்தான இட்லி தயார்.
  • சீயக்காய் அரைக்கும் போது சிறிது வேப்பிலையும், கடுக்காயையும் சேர்த்து அரைத்து உபயோகித்தால் பேன் தொல்லை இருக்காது.
  • துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் கறையோ பட்டுவிட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுகள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.
  • உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யவும். ஓட்டை அடைபடும்.
  • எப்பொழுதாவது உபயோகிக்கும் "ஷூ"க்களில் ரச கற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு "ஷூ"விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது.
  • வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது. ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது.
  • வீட்டு ஜன்னல்களுக்கு கரும் பச்சை, கருநீலத்தினால் ஆன திரைச் சீலைகளைப் பயன்படுத்தினால் வெயிலின் உஷ்ணம் உள்ளே வராது.
  • மொசைக் தரையில் அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்க, வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சாக்பீஸ் தூள் மற்றும் சலவை சோடா கலந்து ஸ்பாஞ்சை வைத்து துடைத்து, பிறகு நல்ல தண்ணீரில் மீண்டும் ஒரு முறை துடைக்க வேண்டும்.
  • இரவில் படுப்பதற்கு முன் ப்ளீச்சிங் பவுடரைச் சிறிது எடுத்து கழிப்பறையிலும் குளியலறையிலும் தூவி விட்டு அப்படியே விட்டு விட வேண்டும். கரப்பான் பூச்சித் தொல்லை இருக்காது.

- சரோஜா சண்முகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com