அக்.1-ல் பிரம்மாகுமாரிகள் இயக்கம் சார்பில் முதியோர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சி: அனுமதி இலவசம்!

ஐ.நா. சபை சார்பில் அக்டோபர் முதல் தேதி உலக முதியோர் தினமாகக் கடைப்பிடிப்படுகிறது. இதையடுத்து, மூத்த குடிமக்களை மதிக்கும் நிகழ்ச்சிக்கு பிரம்மாகுமாரிகள் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது.
special camp for elders organised by brammakumars
special camp for elders organised by brammakumars

ஐ.நா. சபை சார்பில் அக்டோபர் முதல் தேதி உலக முதியோர் தினமாகக் கடைப்பிடிப்படுகிறது. இதையடுத்து, மூத்த குடிமக்களை மதிக்கும் நிகழ்ச்சிக்கு பிரம்மாகுமாரிகள் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரம் அடுத்துள்ள பொடவூர் கிராமத்தில் அமைந்த பிரம்மாகுமாரிகள் சிறப்புப் பயிற்சி மையத்தில் அக்டோபர் 1-ம் தேதி, செவ்வாய்க்கிழமை இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து 55 வயதுக்கு மேற்பட்ட சுமார் 1000 பேர் கலந்துகொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்.

சமூகநலனில் முதியவர்கள் பங்கு, ஆரோக்கிய வாழ்வுக்கான எளிய உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கங்கள், மனமகிழ்வு நிறைந்த அமைதியான வாழ்வை வாழ்வதற்கான குறிப்புகள், வயோதிகத்தை நலமாகவும், பெருமிதத்துடனும் வாழ்வதற்கான எளிய மனப் பயிற்சி ஆகியவை குறித்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை எட்டு மணிக்கு பதிவு செய்வதில் தொடங்கி, காலைச் சிற்றுண்டி, பகல் உணவு, மாலை தேநீருடன் 4.30 மணிக்கு நிகழ்ச்சிகள் நிறைவு பெற உள்ளன.

இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 9840643201, 9940367555 ஆகிய செல்பேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com