'தர்பூசணி வடிவில் ஹேண்ட் பேக்' - ஜப்பான் வடிவமைப்பாளரின் புது முயற்சி!

ஜப்பானில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்று வித்தியாசமான முயற்சியாக தர்பூசணி எளிதாக எடுத்துச் செல்லும்பொருட்டு புதிய தோல் பை ஒன்றை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 
தர்பூசணி வடிவில் தோல் பை
தர்பூசணி வடிவில் தோல் பை

ஜப்பானில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்று வித்தியாசமான முயற்சியாக தர்பூசணி பழத்தினை எளிதாக எடுத்துச் செல்லும்பொருட்டு புதிய தோல் பை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 

கைப்பை, தோல் பைகளை தயாரிக்கும் 'சுச்சியா கபான்' என்ற பிரபல ஜப்பான் நிறுவனம் அவ்வப்போது வித்தியாசமான தயாரிப்புகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தும். அந்த வகையில் தர்பூசணி ஒன்றை சிரமமின்றி எளிதாக எடுத்துச் செல்வதற்கான தோல் பை(ஹேண்ட் பேக்) ஒன்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் தனது 'தி ஃபன் ஆஃப் கேரிங்' என்ற முயற்சியின் ஒரு பகுதியாக வடிவமைப்பாளர் யூசுகே கடோய் இதனை உருவாக்கியுள்ளார். 

ஜப்பானில் பிரபலமான தர்பூசணியை எளிதாக, பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்காக மிகவும் தரமாக, அதே நேரத்தில் புதுமையான உருவாக்கப்பட்டுள்ளதாக வடிவமைப்பாளர் கூறினார். 

வடிவமைப்பாளர், தோல் பையை உருவாக்கும் விடியோ ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com