'கரோனாவிலிருந்து மீண்ட பின்னரும் தோல் பிரச்னைகள் ஏற்படும்'

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட பின்னரும் தோல் பிரச்னைகள் ஏற்படுவதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட பின்னரும் தோல் பிரச்னைகள் ஏற்படுவதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 

சாதாரணமாக வைரஸ் தொற்று ஏற்பட்டாலே தோல் பிரச்னைகள் ஏற்படும். தோலில் அரிப்பு, பருக்கள், ஒவ்வாமை போன்றவை ஏற்படும். இந்த நிலையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு தோல் பிரச்னைகள் அதிகம் இருக்கும் என்றும் வைரஸ் தொற்றிலிருந்து மீண்ட பின்னரும் தோல் வியாதிகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக இந்த புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையின் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் யுரோப்பியன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜி அண்ட் வெனிரியாலஜி நடத்திய ஒரு நிகழ்வில் வெளியிடப்பட்டுள்ளன. 

தோல் நோய்களுக்கான உலகளாவிய அமைப்பு மற்றும் அமெரிக்க தோல் நோய்கள் அகாடமியிடமிருந்து ஆய்வாளர்கள் தரவுகளைப் பெற்றுள்ளனர். 

தோல் பாதிப்புகளுடன் உள்ள 1,000 நோயாளிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதில், சந்தேகத்தில் அடிப்படையில் 224 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்பட்டதில் 90 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. மற்றவர்கள் தனி கண்காணிப்பில் இருந்தனர். 

இதில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சொறி, பருக்கள், வெடிப்புகள் போன்ற தோல் பிரச்னைகள் இருந்தன. மற்றவர்களுக்கும் தோல் பிரச்சனைகள் இருந்த நிலையில் அனைவருக்குமே சிகிச்சை வழங்கப்பட்டது. 

இம்மாதிரியான தரவுகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கரோனா தொற்றால் பாதிக்கப்படாதவர்களைவிட தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோல் நோய்களின் தாக்கம் அதிகம் இருந்தது. அவர்களுக்கு பிரச்னை தீர நீண்ட நாள்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை இருந்தது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் பலரும் சில நாள்களில் தோல் பிரச்னை காரணமாக மருத்துவமனைகளை நாடியுள்ளனர் என்றும் தரவுகளின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. 

முன்னதாக, ஸ்பெயினில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்விலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோல் நோய்கள் பாதிப்பு அதிகம் இருக்கும் என்றும் பெரும்பாலாக கரோனா நோயாளிகளுக்கு கால் விரல்கள், பாதங்களில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com