கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நிறைவு செய்யும் அன்பு பரிசுப்பொருள்கள் சில!

கிறிஸ்துமஸ் மரம், கேக், புத்தாடைகள் என கொண்டாட்டங்களுக்கு மத்தியில் பரிசுப்பொருள்கள் அளிப்பது நமக்கு நிறைவைத் தருகின்றன. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

உலகெங்கும் இயேசு பிறந்தநாளான கிறிஸ்துமஸ் தினம் வெகு சிறப்பாக கொண்டப்படுகிறது. கிறிஸ்துமஸ் மரம், கேக், புத்தாடைகள் என கொண்டாட்டங்களுக்கு மத்தியில் பரிசுப்பொருள்கள் அளிப்பது நம்மை நிறைவடையச் செய்கின்றன. 

கிறிஸ்துமஸ் தின இறுதி நேரத்தில் உங்கள் அன்புக்கு உரியவர்களுக்கு வழங்கி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நிறைவடையச் செய்யும் சில பரிசுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. 

வழக்கமான ஆண்டாக இல்லாமல் இந்தாண்டு உலகம் முழுவதையும் கரோனா பெருந்தொற்று ஆக்கிரமித்துள்ளது. எனவே, பரிசுப் பொருள்களுக்கு கடைகளுக்குச் சென்று மெனக்கெடாமல் வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டு புதிதாக பரிசுப் பொருள்களை அளிக்கலாம். அல்லது நமக்கு எளிதாக கிடைக்கும் அத்திவாசியப் பொருள்களை வழங்கலாம். பரிசுப்பொருள்களுக்கான சில யோசனைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. 

புகைப்படங்கள் தொகுப்பு

உங்கள் அன்புக்குரியவரின் சில புகைப்படங்களை தொகுத்து வித்தியாசமான முறையில் அவற்றை பரிசளிக்கலாம். புகைப்படங்களை வைத்து அவரது வீட்டில் 'வால் ஆர்ட்' போல செய்யலாம். உங்களின் அன்பானவருக்கு கண்டிப்பாக இந்த பரிசு நெகிழ்வை ஏற்படுத்தும். மேலும், அவரது கடந்த கால நினைவுகளை நினைவு கூறச் செய்வதாக இருக்கும். 

அலங்கரிக்கப்பட்ட பழக்கூடை 

தற்போதைய கரோனா காலத்தில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தேவை. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்களின் உடல்நிலை உங்களுக்கு முக்கியம் என்பதை தெரியப்படுத்தும் விதமாக பழங்கள் வாங்கி அவற்றை ஒரு அழகான கூடையில் வைத்து அலங்கரித்து பரிசாக கொடுக்கலாம். அவர்களின் உடல்நலத்தில் அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பதை இந்த பரிசு காட்டும். 

சாக்லேட் கிறிஸ்துமஸ் மரம்

சாக்லேட் யாருடைய முகத்திலும் ஒரு புன்னகையை வரவழைக்கும். அதிலும் கிறிஸ்துமஸ் என்றால் சாக்லேட் கேக், சொல்லவே தேவையில்லை. ஒரு சிறிய  செயற்கை கிறிஸ்துமஸ் மரத்தை கொண்டு வந்து அதன் ஒவ்வொரு அடுக்கையும் வெவ்வேறு சாக்லேட்டுகளால் நிரப்பி அதனை பரிசளிக்கலாம். 

பூங்கொத்து

பூக்கள் மிகவும் மென்மையானவை. அன்பை வெளிப்படுத்தக்கூடிய பொருள்களில் மிக முக்கியானது. வெவ்வேறு வகையான பூக்களை சேகரித்து வீட்டிலிருந்தே ஒரு பூங்கொத்தை தயார் செய்து கொடுக்கலாம். 

அத்தியாவசியப் பொருள்கள் 

உங்கள் அன்பானவர்கள் நாள்தோறும் பயன்படுத்தும் ஒரு பொருளைத் தேர்வு செய்து கொடுக்கலாம். உதாரணமாக காபி கப், தினமும் காபி அல்லது டீ குடிப்பதை எல்லாரும் வழக்கமாக கொண்டிருக்கிறோம். அதேபோல அழகான தலையணை, இது தூங்கும்போது உங்களை கண்டிப்பாக நினைவுபடுத்தும். அவர்களுக்கு உபயோகமான ஒரு பொருளை வாங்கித் தருவது நிச்சயம் உங்கள் அன்பை வெளிப்படுத்தும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com