கேஸ் மாஸ்க் அணிந்தததால் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர்!

கேஸ் மாஸ்க் அணிந்ததற்காக அமெரிக்க விமானத்தில் பயணிகளால் ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
கேஸ் மாஸ்க் அணிந்தததால் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர்!

கேஸ் மாஸ்க் அணிந்ததற்காக அமெரிக்க விமானத்தில் இருந்து ஒருவர் பயணிகளால் வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியில் இருந்து ஹூஸ்டன் நகரம் நோக்கி சென்ற FYI 2212 விமானத்தில் ஒரு இளைஞர் முகத்தில் கேஸ் மாஸ்க் அணிந்த நிலையில் ஏறியுள்ளார். இதைப் பார்த்த பயணிகள், ஏன் மாஸ்க் அணிந்துள்ளீர்கள்? என்று கேட்டுள்ளனர். மேலும், மாஸ்க்கை கழற்றவும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அவர் அதனை அகற்ற மறுத்துள்ளார். 

இதனால், பயணிகளுக்கும், அந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்தது. பின்னர் விமான அதிகாரிகள் வந்து சமரசம் செய்து வைக்க முயன்றனர். ஆனால், பயணிகள் பிடிவாதமாக இருக்கவே, அந்த நபரை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக பயணித்தது. 

உலகம் முழுவதுமே கரோனா வைரஸ் தாக்கத்தினால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், மாஸ்க் அணிந்த நபருக்கு கரோனா வைரஸ் இருக்குமோ என்ற நோக்கத்தில் பயணிகள் இவ்வாறு நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

ஆனால், மற்ற பயணிகளோ, அவரது பாதுகாப்பு கருதிதான் நாங்கள் அவ்வாறு நடந்து கொண்டதாக கூறியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com