'தாய்மார்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருந்தால்...'

கர்ப்பிணிப் பெண்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருந்தால் குழந்தைக்கு மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் என்று கூறுகிறது ஓர் ஆய்வு. 
'தாய்மார்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருந்தால்...'

கர்ப்பிணிப் பெண்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருந்தால் குழந்தைக்கு மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் என்று கூறுகிறது ஓர் ஆய்வு. 

பெண்கள் கர்ப்ப காலத்தில் தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கின்றனர். இந்நிலையில், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருந்தால் எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு பல்வேறு விதமான பிரச்னைகள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுகின்றனர். 

முக்கியமாக, கர்ப்ப கால தொடக்கத்தில் இருந்து 6 மாத காலம் வரை வைட்டமின் டி குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு குறையும் பட்சத்தில் குழந்தைகளுக்கு ஏ.டி.எச்.டி எனப்படும் ஹைபராக்டிவிட்டி டிஸார்டர்(hyperactivity disorder) கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர். 

பின்லாந்து, துர்கு பல்கலைக்கழகம் மற்றும் நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கள் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

கர்ப்ப காலத்தில் தாயின் ஆரோக்கியத்திற்கும், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் இடையேயான தொடர்பு குறித்து பின்லாந்தில் பிறந்த 1,067 குழந்தைகளை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பொதுவாகவே பெண்களிடையே வைட்டமின் டி குறைபாடு அதிகம் காணப்படுவதாகவும், இது உலகளாவிய பிரச்னை என்றும் பேராசிரியர் ஆண்ட்ரே கூறுகிறார். குறிப்பாக, பின்லாந்தில் புலம்பெயர்ந்த தாய்மார்கள், வைட்டமின் டி குறைபாட்டுடன் காணப்படுகின்றனர் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இறுதியாக, பிறக்கும் குழந்தைகள் மூளை வளர்ச்சியுடன், நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டுமெனில், தாய்மார்கள் வைட்டமின் டி அடங்கிய உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் ஆய்வாளர்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com