'ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளின் குடும்பத்தினர் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்'

ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகளின் குடும்பத்தினர் அதிக மன உளைச்சலுக்கு ஆளாவதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளின் குடும்பத்தினர் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்'


ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளின் குடும்பத்தினர் அதிக மன உளைச்சலுக்கு ஆளாவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகம் ஆட்டிசம் தொடர்புடைய குறைபாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. ஆய்வில், ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகள் இருக்கும் குடும்பங்களில் மன உளைச்சல் அதிகம் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்கு, 2 முதல் 20 வயது வரையிலான குழந்தைகளிடம் ஆய்வு செய்து, குழந்தைகளின் செயல்பாடுகள் குடும்பத்தினரிடையே எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

ஆட்டிசம் கோளாறு கொண்ட குழந்தைகளின் செயல்பாடுகள் தங்களது அன்புக்குரியவர்களை உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கிறது என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறினார்.

மேலும், அவர்களிடையே ஒருவித தனிமையை ஏற்படுத்துவதாகவும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைகளுக்கு அதிக பணம் செலவழிப்பதே குடும்பத்தினருக்கு மன உளைச்சல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com